தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்: இணை பொறுப்பில் இருவர்

Union Minister Piyush Goyal As Election in Charge for Tamil Nadu BJP : தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
Union Minister Piyush Goyal appointed as election in-charge of Tamil Nadu BJP
Union Minister Piyush Goyal appointed as election in-charge of Tamil Nadu BJPGoogle
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

Union Minister Piyush Goyal As Election in Charge for Tamil Nadu BJP : தமிழக சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவுபெற இருப்பதால், அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். அதன்படி, ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

களத்தில் அரசியல் கட்சிகள்

ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் களமிறங்கி, முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனுக்கள் வாங்கும் பணியை துவக்கி உள்ளன. அடுத்த சில நாட்களில், கூட்டணி பேச்சை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளன.

விருப்ப மனுக்கள்

பாமக சார்பில் நேற்று முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.

களத்தில் மத்திய அமைச்சர்கள்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது. பாஜக பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் 3 பேர் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்

அதன்படி தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வலதுகரம் என்று கருதப்படும் இவர், புதிய பொறுப்பு மூலம், தமிழக பாரதிய ஜனதாவின் கரத்தை மேலும் வலுப்படுத்துவார்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ள பியூஸ் கோயல், மகாராஷ்டிராவை சேர்ந்தவர். 61 வயதான பியூஸ் கோயல் பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

இணை பொறுப்பாளர்கள்

இணை பொறுப்பாளர்களாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ளார்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாரதிய ஜனதா, மேலும், சிலரை கூட்டணியில் சேர்த்து வலுவான நிலையில் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வியூகம் வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in