விரைவில் பயன்பாட்டிற்கு வரும் வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை :ஜீலை முதல் தொடக்கம்...!

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ஜீலை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை
Vadapalani-Poonamallee Metro rail service to become operational soon; launch in July.
Vadapalani-Poonamallee Metro rail service to become operational soon; launch in July. google
1 min read

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ சேவை , பிரதமர் தொடங்கி வைப்பு

சென்னை வடபழனி - பூந்தமல்லி இடையிலான 14.6 கி.மீ நீளமுள்ள புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தை ஜூலை மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீண்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையே , பயன்பாட்டிற்கு வரும் மெட்ரோ

பணிகள் முடிந்தும் மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து 4 மாதங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ சேவை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவில் வந்த நிலையில் ஜீலை முதல் சேவை தொடங்கப்படும் என்று தெர்விக்கப்பட்டிருக்கிறது

குறையும் பயண நேரம்

இந்த வழித்தடம் பொதுமக்களின் பயண நேரத்தை கணிசமாக குறைக்கிறது , அதாவது தற்போது பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை பயணம் செய்ய சுமார் 90 நிமிடங்கள் ஆவதற்குப் பதிலாக, இனி வெறும் 30 நிமிடங்களில் சென்றடைய முடியும்.

ரயில் நின்று செல்லும் இடங்கள்

.இந்த ரயில் வழித்டமானது ,பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ் மற்றும் போரூர் சந்திப்பு ஆகிய 10 நிலையங்களில் ரயில்கள் நின்று செல்லும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ரயில் சேவையானது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் (Phase II, Corridor IV) ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .வடபழனியில் உள்ள தற்போதைய பச்சை வழித்தடத்துடன் அதாவது சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான பாதையுடன் இணைக்கப்படும்.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in