”என் வாழ்க்கையில் இரண்டு பெரிய தவறுகள்” : 2006 ADMK, 2017ல் DMKவுடன் கூட்டணி : இப்போது சரியான முடிவு : வைகோ ஆதங்கம்..!

அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து தனது வாழ்வில் இரண்டு தவறுகளை செய்து விட்டதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
Vaiko expressed regret, he made two mistakes in his life  forming alliances with  AIADMK and DMK
Vaiko expressed regret, he made two mistakes in his life forming alliances with AIADMK and DMKAI generated
2 min read

வைகோவின் மதிமுக

MDMK General Secretary Vaiko has expressed regret, stating that he made two mistakes in his life by forming alliances with the AIADMK and the DMK.

2006ம் ஆண்டு மதிமுக அதிமுகவுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்தது. அதன்பிறகு 2017ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்ற தேர்தல் வரை அந்தக் கூட்டணியில் நீடித்தது.

தேர்தலுக்கு பிறகு அண்மையில் மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் இணைந்து இருக்கிறது.

கருணாநிதி எழுதிய கடிதம்

இந்தநிலையில், வைகோ தனது சமூகவலைதள பக்கத்தில், "1993, ஏப்ரல் 14, 15 தேதிகளில் நடந்த சில சம்பவங்களை மனதில் வைத்து, 16 வருடம் கழித்து 2009 மார்ச் 29ம் தேதி, முரசொலியில் உடன் பிறப்புக்கு எழுதிய கவிதையில், தன் கற்பனை வளத்தை எல்லாம் காட்டி எழுதியிருந்தார்.

அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து 2026 ஜூலை 11ம் தேதி, முரசொலியில் "அந்த நினைவுக்கு நன்றி" என்று முன்பு அவிழ்த்துவிட்ட கோயபல்ஸ் பொய்யை மீண்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

மதிமுக மீது திமுகவிற்கு வெறுப்பு

திமுக கூட்டணியிலிருந்து எமது இயக்கம் வெளியேறியதால் ஏற்பட்ட வெறுப்பில் என்னைக் களங்கப்படுத்துவதற்காக இதை வெளியிட்டார்களா? எனவே இந்தப் பழி சுமத்தும் கவிதையை இன்றைய திமுக தலைமை திட்டமிட்டு இப்போது இப்படி வெளியிட்டிருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன்.

பொய் என்றும் நிலைக்காது

கொலைப்பழியை என் மீது 1993 இல் திட்டமிட்டு ஏவியது, மீண்டும் அதே பழியை - குற்றச்சாட்டை தற்போதைய தலைமையினர் தொடுத்திருக்கிறார்கள். பொய்யும், அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய்தான் நிலைத்து நிற்கும். என்னைக் காக்கும்.

உதயசூரியனில் மதிமுக போட்டி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. அது மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.

கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியிலிருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.

என் வாழ்வில் இரண்டு பெரிய பெருந்தவறுகள்

என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று அதிமுகவுடன் கூட்டணி, மற்றொன்று திமுகவுடன் கூட்டணி வைத்தது தான்.

அதிமுகவுடன் மதிமுக கூட்டணி

2006ல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்கள்.

நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.

திமுகவுடன் மதிமுக கூட்டணி

2017ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம்.

நம்பிக்கையோடு பயணிக்கிறோம்

நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் தனது உள்ள குமுறலை வைகோ வெளிப்படுத்தி இருக்கிறார்.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in