”ஆட்சியை கவிழ்க்க சதியா? செஞ்சு பாருங்க” : வைகோ பகிரங்க சவால்! : திமுக, அதிமுகவை தவெக தரைமட்டமாகி விட்டதாக கருத்து...

ஆட்சியை கவிழ்க்க சதியா? முடிஞ்சா செஞ்சு பாருங்க என்று, திமுக கூட்டணிக்கு வைகோ பகிரங்கமாக சவால் விடுத்து இருக்கார்.
Vaiko openly challenged  DMK alliance, "Is there a plot to topple govt? Go ahead and try it if you can."
Vaiko openly challenged DMK alliance, "Is there a plot to topple govt? Go ahead and try it if you can."AI generated
2 min read

தவெக ஆட்சி - கடுமையான விமர்சனங்கள்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து, 75 நாட்கள் கடந்து விட்டது. முதல்வர் விஜய் ஆட்சிக்கு எதிராக திமுக, அதிமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

திமுகவுக்கு வைகோ பதிலடி

குறிப்பாக திமுகவினர் தவெக ஆட்சி 6 மாதங்கள் தான் நீடிக்கும் என்று பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து விலக தவெக கூட்டணியில் இணைந்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் அரசு மீது விஷக்கணைகள்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்று பேசிய அவர், “15-20 நாட்களாக முதலமைச்சர்கள் விஜய் மீதும் அவருடைய அரசு மீதும் நாள்தோறும் விஷக்கணைகள் எதிரிகள் வட்டாரம் மட்டுமல்ல கூட்டணி கட்சிகள் வட்டாரத்திலிருந்தும் உபயோகப்படுத்தப்படு வருகின்றன

தவெக கூட்டணியை தடுக்க சதி

திமுக ஆட்சியில் இருந்தபோது உங்களுடைய பானங்கள் எங்கே போனது. திமுக கூட்டணியில் இருந்த போது இது போன்ற கண்டன குரல்கள் எழுப்பியது உண்டா ? கண்டன குரல் ஏன் அன்று எழவில்லை.

இப்போது நாள்தோறும் அறிக்கை செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கிற கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி உடன் வந்து விட்டார்கள் அல்லவா ஒரு வார்த்தை விஜய் அரசை பற்றியோ அமைச்சரை பற்றியோ ஒரு விமர்சனம் வைத்தது உண்டா? கிடையாது.

அரசு மீது விமர்சனம் என்றால் புகார் இருந்தால் அமைச்சரிடமும் முதலமைச்சரிடமும் கூற வேண்டும் தானே? ஏன் அறிக்கை செய்தியாளர்களை எல்லாம் சந்திக்கிறீர்கள்.

ஆறு மாதங்களில் மாற்றம் - என்ன நினைப்பு

உங்கள் தயவில் தானே விஜய் ஆட்சி நடத்துகிறார்.. எந்த நேரத்தில் வேணாலும் கவலைக்கலாம் என்ற எண்ணம். ஒரு மிகப்பெரிய கூட்டணி தலைவர் கூறுகிறார் ஆறு மாதங்களில் மீண்டும் தேர்தல் வரும்.

அதற்கு என்ன திட்டம்? அப்படி என்ன ரகசிய உறவு? சும்மா லேசா மிரட்டி பாக்காதீங்க..

முடிஞ்சா ஆட்சியை கலைங்க

ஆட்சியை கவிழ்த்து விடுவோம் கவிழ்த்து விடுவோம் என்று.. பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைக்கப் போகிறீர்களா? செய்து பாருங்கள் நான் சவால் விடுகிறேன் என்று வைகோ கூறினார்.

தவெக 180 இடங்களில் வெற்றி பெறும்

மீண்டும் தேர்தல் வரட்டும் 108 இல்லை 180 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

ஊழல் அடியோடு அகற்றம்

இன்று கரப்ஷன் என்ற ஒன்றை விஜய் அடியோடு அகற்றி உள்ளார். இதைவிட என்ன பெரியதாக சாதிக்க வேண்டும். ஒரு நேர்மையை நிலையான முயற்சிக்கின்ற ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..

திமுக ஆட்சியில் எங்கும் ஊழல்

உங்களை தடுப்பதற்கு நானும் என்னுடைய இயக்கமும் முதல் ஆளாக வந்து நிற்போம். தெருவுக்கு தெரு வைகோ வருவான். பணியாளர்கள் நியமிப்பதில் லஞ்சம் டிரான்ஸ்பர் பேரலஞ்சம் என அனைத்து துறையிலும் கடந்த ஆட்சியில் நடந்தது.

இதுபோல் தற்பொழுது நடைபெற்ற முடியவில்லை.. அதனால் அரசு அதிகாரிகள் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்றார்கள் இது அனைத்தும் எனக்கு தெரியும் என்று கூறினார்.

திமுக, அதிமுக தரைமட்டம்

தவகெவும், முதல்வர் விஜயும் திமுக, அதிமுகவை தரைமட்டமாக்கி விட்டார்கள். இது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்” இவ்வாறு வைகோ பேசினார்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in