உண்மை வெளிவர வேண்டும் :
GK Vasan on EPS Tour : தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ”திருப்புவனம் அஜித்குமார் உயிரிழப்பில் பெரும் மர்மம் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி யார்? முழுமையான விசாரணை மூலம் இந்த மர்மங்களுக்கு விடைகாண வேண்டும்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது ;
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள்தான் உள்ளன. பழனிசாமி கூட்டணித் தலைவராக இருக்கிறார். இதை அமித்ஷா உறுதிபடுத்தியுள்ளார்.
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள். அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டனர். எனவே, எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
உண்மை வெளிவர வேண்டும் :
தமாகா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ”திருப்புவனம் அஜித்குமார் உயிரிழப்பில் பெரும் மர்மம் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி யார்? முழுமையான விசாரணை மூலம் இந்த மர்மங்களுக்கு விடைகாண வேண்டும்.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது ;
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள்தான் உள்ளன. பழனிசாமி கூட்டணித் தலைவராக இருக்கிறார். இதை அமித்ஷா உறுதிபடுத்தியுள்ளார்.
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள். அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டனர். எனவே, எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
மாற்றத்திற்கான பயணம் வெற்றி தரும் :
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள். பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக அமையும்.
காவிரி கடைமடை வரை தண்ணீர் சென்று சேராததால், பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே, கடைமடை வரை தண்ணீர் செல்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும்”, இவ்வாறு ஜி. கே. வாசன் கேட்டுக் கொண்டார்.
======