”ரூ.100க்கு 10 காய்கறிகள்” : தீபாவளி பரிசாக வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு : கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஏற்பாடு.!

தமிழக அரசு சார்பில் தீபாவளியை ஒட்டி, 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
view of Deepavali, Tamil Nadu government  offering a pack of 10 varieties of vegetables for rs.100
view of Deepavali, Tamil Nadu government offering a pack of 10 varieties of vegetables for rs.100 source:thamizhalai,ai generated
1 min read

தவெக அரசின் நலத்திட்டங்கள்

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதில் இருந்து பொதுமக்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வர்றாரு.

வெற்றிப் பயண திட்டம், வெற்றி வீடு திட்டம், வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் என பல திட்டங்களை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தி இருக்கு.

‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’

அந்த வகையில் திபாவளி பண்டிகையை ஒட்டி ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கு.

10 காய்கறிகள், ரூ.100

அதன்படி, அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

நாளை (நவ. 5) முதல் 7ம் தேதி வரை 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை நவ. 3-ஆம் தேதி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை

தீபாவளி தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்.

218 விற்பனை நிலையங்களில் விற்பனை

கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகள் (சென்னையில் மட்டும்) விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே

ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100 என்ற விலையில் மட்டுமே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். கூடுதலாகவோ குறைவாகவோ வசூலிக்கக்கூடாது என்றும் ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல் விலை குழுவால் நிர்ணயிக்கப்படும். இதனுடன் ஒரு தொகுப்புக்கு ரூ. 2.50 என்ற அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைக்கான செலவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் (500 கிராம்)

தக்காளி (500 கிராம்)

கத்தரிக்காய் (250 கிராம்)

உருளைக்கிழங்கு (250 கிராம்)

கேரட் (200 கிராம்)

பீன்ஸ் (200 கிராம்)

பச்சை மிளகாய் (100 கிராம்)

எலுமிச்சை (100 கிராம்)

இஞ்சி (50 கிராம்)

தேங்காய் (400-450 கிராம்)

ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை, விநியோகத் தொகை மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 ஆகியவற்றைக் கணக்கிட்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===============