"இந்த விஜய் வேண்டுமா, ஸ்டாலின் வேண்டுமா”: மக்களுக்கு சரவெடி கேள்வி

தமிழகத்தில் அடுத்து மக்கள் விரும்பும் விஜய் அல்லது மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா என்பதை, மக்கள் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று, தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
Vijay asked people to think and decide whether they want people's favorite Vijay or the anti-people Stalin government in Tamil Nadu
Vijay asked people to think and decide whether they want people's favorite Vijay or the anti-people Stalin government in Tamil Nadu google
3 min read

தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை படிப்படியாக தொடங்கி இருக்கிறது.

தவெகவுக்கு Courage அதிகம்

இந்தநிலையில், சேலத்தை சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், ” Courage என்றால் பவர், நம்மை சாதாரணமாக நினைப்போர், கிண்டல் கேலியை பேசுவோருக்கு நமது பவரை காண்பித்து இருக்கிறோம்.

தமிழ்நாடு எனது தாய்நாடு

விஜய் பனையூரை விட்டு வெளியே வா என்று என்னை சீண்டி பார்த்தவர்களுக்கு நான் சொல்கிறேன். தமிழ்நாடு, தமிழ்நாடு என்று சொல்லுகிறவர்களுக்கு, இது என் தாய்நாடு.

8 கோடி மக்கள் எனது குடும்பம்

என் வீட்டில் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். தமிழக மக்களே எனது சொந்தம். அவர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பதே எனது லட்சியம்.

நீதி கேட்டு வந்து இருக்கேன்

மக்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை, நீதி கேட்டு வந்து இருக்கேன். மக்களுக்காக வந்தது ஒரு தப்பா, எங்களுக்கு மட்டுமே கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? இந்த என்ன நியாயம்? மற்ற கட்சிகளுக்கு கொடுக்கும் அனுமதி எனக்கு மட்டும் கிடையாதா? என்ன நியாயம்?

மக்களிடம் நியாயம் கேட்கிறேன்

இதைத்தான் ஆங்கிலத்தில் SOP என்பார்கள். ஆனால் இங்கு Stalin Sir operating procedure ஆக இருக்கிறது. எனக்கு மட்டும் Stalin operating procedure. எனக்கு அநீதி இழைக்கும் போது உங்களிடம் வந்து நியாயம் கேட்கிறேன்.

வண்டி வண்டியாக பணம் கொண்டு வந்து கொடுப்பாங்க. சந்தோஷமா வாங்கிக்கோங்க, அது உங்கள் பணம், வாங்கிக் கிட்டு தவெகவுக்கு ஓட்டு போடுங்க.

ஓட்டு உங்க உரிமை, விலை போகாதீங்க

ஜென்ஜி கூட்டத்தினருக்கு ஒன்று சொல்கிறேன். பணத்தை கொடுத்து ஏமாற்றும் கூட்டத்தை ஒதுக்கித் தள்ளுங்க. ”எங்க ஓட்டு எங்க உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.

கேட்டுச்சா சார், இனி மேல் நீங்கள் கொள்ளை அடித்து வைத்த பணத்தை குப்பையில் போடுங்க. உங்க ஊழல் ஆட்சியையும் மக்கள் குப்பையில் தூக்கி போட போறாங்க.

சிறுவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறுவர்களே நீங்க எப்போது எனக்கு ஆதரவா நிற்கிறீங்க. இனி நீங்க செய்ய வேண்டியது உங்கள் வீட்டில் இருப்பவர்களை விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வையுங்க. வெறுப்பு அரசியல் எங்களுக்கு கிடையாது.

எங்களுக்கும் அனுபவம் இருக்கு

அரசியல் ரீதியான எதிரிகளை மட்டுமே, தேர்தலில் வெற்றிக் கொள்ளவே அரசியலுக்கு வந்து இருக்கிறோம். அனுபவம் இல்லாதவங்களால எப்படி ஆட்சி செய்யும் என்று புலம்புகிறார்கள்.

அனுபவம், அனுபவம்ன்னு சொல்லீற்ங்களே, அனுபவத்தை வைத்து மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சதை தவிர வேறு எதையாவது செய்து இருக்கீங்க.

அரசியல் கட்சிகளுக்கு சவால்

அடுத்தவங்களோட அட்ரசில் அரசியல்வாதிகளாக இருப்பவர்களுக்கு ஒரு சவால், தனியாக கட்சி ஆரம்பிச்சு தேர்தலை சந்தித்து அட்லீஸ்ட் 1 சதவீதம் வாக்கு வாங்கும் தில், திராணி உங்களுக்கு இருக்கா?

75 வருஷ கட்சி, 50 வருஷ கட்சி இருக்கிற உங்க முன்னால, மக்கள் ஆதரவோடு நிற்கிற எனக்கு இந்த அனுபவம் போதும் இல்லையா? அண்ணாவை மறந்த கட்சி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்த கட்சிகளுக்கு இது புரியலையா?

சூப்பரான ஆட்சியை கொடுக்க தயார்

கொள்ளை அடிக்கிற அனுபவம் எங்களுக்கு இல்லை, சுட்டுப் போட்டாலும் வராது, மக்களை நேசிக்கற குணம் இருந்தா சூப்பர் ஆன ஆட்சி கொடுக்கலாம். காமராஜ், எம்ஜிஆர் மாதிரி மக்கள் சக்தி துணையால, நல்ல அதிகாரிகளின் துணையால நல்லா ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். செஞ்சு காட்டுகிறேன்.

மக்களுக்கு நல்லது செஞ்சீங்களா?

நாலரை வரும் கழிச்சு, உங்கள் கனவுகளை சொல்லுங்க, நாங்க நிறைவேத்தி காட்டுகிறோம். ஸ்டாலின் சார் மக்களின் உங்களுக்கு தெரியுமா, மக்களை நல்லது செய்வீங்க என்று நம்பிதான் உங்களுக்கு ஆட்சியை மக்கள் கொடுத்தாங்க.

ஆனால் நீங்க செஞ்சது? இப்போ மக்களின் கனவு உங்களை ஆட்சியில் இருந்து அகற்றணும், தவெகவை ஆட்சியில் அமைப்பது தான் மக்களின் ஒரே கனவு.

திமுக அரசு அவுட்ஆப் கண்ட்ரோல்

தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆப் கண்டோல் என்கிறார் ஸ்டாலின் ஆனால் உண்மையில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு திமுக அரசு அவுட் ஆப் கண்ட்ரோல், மொத்தத்தில் ஸ்டாலின் ஆட்சி அவுட் ஆப் கண்ட்ரோல்.

மக்கள் சந்தோஷமா இருக்காங்களா?

மக்கள் சந்தோஷமா இருக்கிறதா ஸ்டாலின் சொல்றாரு, ஆனால், மக்கள் உண்மையால் சந்தோஷமா இருந்தா, விவசாயிகள், மக்கள், தூய்மைப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஏன் போராட்டம் பண்றாங்க.

பொய், பொய், பொய் மட்டும் தான்

அடிப்படையே பிரச்னையா இருந்தா ஆளுங்கட்சி ஒன்று எதுக்கு இருக்குன்னு மக்கள் நினைக்கிறாங்க. ஆட்சிப்பு வரும் போது, பொய் பொய், ஆட்சியை வடிடு போகும் பொது பொய், பொய்.

எவ்வளவு வாக்குறுதிகளை நிறைவேத்தி இருக்கீங்க

முதல்ல 70 சதவீத வாக்குறுதிக் நிறைவேற்றம், 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேத்தி விட்டோம், 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்று விட்டோம் என்று சொல்றாங்க. கடைசியில் 20 சதவீத அளவுக்கு போய் நிற்கும் என நினைக்கிறேன்.

அண்டப்புளுகு என்றால், பெண்களுக்கு பாதுகாப்பு தமிழகத்தில் கொட்டிக் கிடக்குதாம். போதைப் பொருள் கலாச்சாரம் தலைவிரிச்சு ஆடுது. சட்டம் ஒழுங்கு சரியா இருந்தா ஏன் இப்படி நடக்குது,

டிஜிபியை அப்பாயிண்ட் பண்ணுங்க

முதல்ல காவல்துறைக்கு ஒரு டிஜிபி போடுங்க சார். இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்கிறீங்களே, நீங்க வந்தா என்ன செய்வீங்கன்னு கேட்கலாம், மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியை தருவேன். அதற்கான தேர்தல் அறிக்கை தயாராகி வருது, என்னை நம்பும் உங்கள எப்போதும் ஏமாற்ற மாட்டேன்.

உங்களுக்காக போராடத் தயார்

உங்களுக்கு எந்த நிலைக்கு போய் போராட தயாராக இருக்கிறேன். இரண்டு பேருக்கு நடுவில தான் போட்டியே, ஒன்னு தூய சக்தி தவெக, இன்னொன்று தீய சக்தி திமுக.

மக்கள் விரும்பும் விஜய்

நடக்க இருப்பது யாருக்கான தேர்தல்?, யார் ஆட்சியில் இருப்பது?, மக்கள் விரோத ஆட்சியை யார் நடத்துறது?, அப்போ யாரை அகற்றணும், பலமுறை மக்களால் புறக்கணிப்பட்டவங்களை நான் ஏன் விமர்சிக்கணும்.

மக்கள் விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஸ்டாலின் வேண்டுமா இதுதான் இப்போதைய கேள்வி.

விஜயா? ஸ்டாலினா?

விஜய நம்பறீங்களா, ஸ்டாலின் சாரை நம்பளங்களா, அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு, கதம், கதம், இந்த போர் முழக்கம் உங்களை இனி தூங்க விடாது.

டிஎன்பிஎஸ்சி தேர்வை கேன்சல் செய்தீங்க, இளைஞர்களின் கனவு எப்படி பாதிச்சு இருக்கும். ஒரு தேர்வை கூட நடத்த தெரியவில்லை.

ஆட்சியில் பங்கு, குண்டு வெடிக்கிறது

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு அரசியல் குண்டு எல்லா கூட்டணியிலும் வெடிக்கிறது. ஸ்டாலின் சார் பதறுகிறார். அவர்களை பொருத்தவரை ஜெயிக்க மட்டும் தான் கூட்டணி தேவை.

வெல்வோம் ஒன்றாக, வெலத் மட்டும் தனியாக இதுவே திமுகவின் மந்திரம், நமக்கு வெற்றி நிச்சயம் நம்பிக்கையோடு காத்திருங்க” இவ்வாறு விஜய் உரையாற்றினார்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in