

இடைத்தேர்தல் பிரச்சாரம் :
மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் இன்று பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொண்டார்.
த.வெ.க. கூட்டணி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெற்ற இந்த தேர்தல் பிரசாரம், மாமண்டூரில் தொடங்கி மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் வழியாக நடைபெற்றது.
மதியம் தொடங்கிய இந்த ரோடு ஷோ, சுமார் 45 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.
மாமண்டூர், படாளம், கருங்குழி, மதுராந்தகம், பெரும்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக விஜய் பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்தார்.
இந்த தேர்தல் பயணத்தின் போது 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விஜய் மக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.
விஜய்யை காண பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டனர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் சாலையோரங்களில் காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.
இதனால் ரோடு ஷோ நடைபெற்ற பகுதிகள் முழுவதும் தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது.
பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் விஜய் வழிபாடு நடத்துவார் என முன்கூட்டியே தகவல் வெளியாகியிருந்தது.
இந்த பயணமும் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது.
தேநீர் கடையில் மக்கள் சந்திப்பு.. நெல் வயலில் டிராக்டர் ஓட்டிய விஜய் :
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் விஜய் மக்களோடு நேரடியாக கலந்துரையாடினார்.
சாலையோர தேநீர் கடையில் பொதுமக்களுடன் தேநீர் அருந்திய அவர், பின்னர் நெல் வயலுக்குள் சென்று டிராக்டர் ஓட்டியும் விவசாயிகளுடன் உரையாடினார்.
இதனால் அப்பகுதியில் திரண்டிருந்த மக்கள் உற்சாகமடைந்தனர்.
வேட்பாளர் மரகதம் குமரவேல் உடன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு :
த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் உடன் இணைந்து கிராமங்கள் தோறும் சென்று விஜய் வாக்கு சேகரித்தார்.
சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களை சந்தித்து ஆதரவு கோரியதுடன், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
===================