”எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை!’ : "யார் சொன்னாலும் நம்பாதீங்க!” : நம்ப தலைமையில் ஆட்சி, விஜய் திட்டவட்டம்!

யாருடனும் கூட்டணி இல்லை, தவெக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
Vijay categorically stated that there is no alliance with anyone, government will formed by TVK
Vijay categorically stated that there is no alliance with anyone, government will formed by TVKgoogle
1 min read

சட்டமன்ற தேர்தல் 2026

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி நிறைவு பெறுகிறது. மனுத்தாக்கலுக்கு 5 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே, இந்த வாரம் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து விட்டு, அடுத்த வாரம் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிலையில் அரசியல் கட்சிகள் உள்ளன.

யாருடன் தான் தவெக கூட்டணி

தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சு தொடர்ச்சியாக இருந்தது. ஆனால், திமுக கூட்டணியில் 28 இடங்களை பெற்றுக் கொண்ட காங்கிரஸ் அங்கேயே தொடர்கிறது.

பின்னர் பாஜகவுடன் பேச்சுவார்த்தை, என்டிஏ கூட்டணியில் தவெக, ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்களும் நீடித்தன. இவற்றுக்கு யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என்று முற்றுப்புள்ளி வைத்தது தமிழக வெற்றிக் கழகம்.

தவெக சார்பில் இஃப்தார்

இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் தலைமையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. யில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

மக்கள் டீமில் தவெக

அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். தவெக எந்த டீமிலும் இல்லை. மக்கள் டீமில் தான் இருக்கிறது என தெரிந்ததும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என யோசித்தனர்.

தவெக தலைமையில் தான் ஆட்சி

தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கை, மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதியில் தவெக உறுதியாக உள்ளது.

அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்தவித சமரசமமும் வைத்துக்கொள்ள போவதில்லை. இது குறித்த பேச்சுகே இடமில்லை.

யார் சொல்றதையும் நம்பாதீங்க

யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த டார்கெட்டை அடைய முடியும்” என்று விஜய் தெரிவித்தார்.

இதன்மூலம் சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுவதை அவர் உறுதி செய்தார்.

தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி

விஜய் உறுதியாக தெரிவித்து இருப்பதன் மூலம், தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி 100 சதவீதம் உறுதியாகி விட்டது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனைப்போட்டியுடன் தேர்தலை சந்திக்கிறது தமிழகம்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in