தமிழக தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தவெக
நடந்து முடிந்த சட்டமற்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிகப்பட்ச்மான இடங்களை பெற்று முன்னிலையில் இருக்கிறது, ஆனாலும் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
பெரும்பான்மையான இடங்களை கோறும் ஆளுநர்
தொடர்ந்து விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆட்சி அமைகக தேவையான் பெரும்பான்மையான இடங்களை ஆளுநர் கோரும் நிலையில் தொடர்ந்து இழுபறியானது நீடிக்கிறது
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தனிப்பெரும் கட்சியான தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து நாளை (மே 08) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இது குறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது , 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும்
மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிப்பிட்டுள்ளது
சென்னையில் காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக ஆர்ப்பாட்டம்
ன்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ணா சாலை, தாராப்பூர் டயர் அருகில் நாளை காலை 11 மணியளவில் எனது தலைமையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் .
நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
=============