"கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்குங்க, விசில் ஊதி அனுப்புங்க”:விஜய்

அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு, செவிட்டில் விசிலை ஊதி அனுப்பங்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்து இருக்கிறார்.
Vijay said that if political parties offer money, people should accept it and blow the whistle
Vijay said that if political parties offer money, people should accept it and blow the whistle google
1 min read

மக்களிடம் நீதி கேட்கிறேன்

சேலத்தில் தவெக நிர்வாகிகளிடையே பேசிய விஜய், “ மக்கள் கிட்ட ஓட்டு கேட்டு மட்டுமே வரல, உங்ககிட்ட நீதி கேட்டும் வந்திருக்கிறேன். ஆக்சுவலா உங்களுக்காக நீதி கேட்கிறதுக்காகத்தான் இந்த அரசியலுக்கே வந்தேன், ஆனா இன்னைக்கு நான் உங்ககிட்ட நீதி கேட்கிறதுக்காக வந்திருக்கிறேன்.

மக்களை நேசிப்பது தவறா?

இந்த விஜய் என்னங்க தப்பு பண்ணான்? தன்னை நேசிச்ச தன்னுடைய மக்களுக்காக அரசியலுக்கு வந்தான், அது ஒரு தப்பா? எல்லாத்தையும் ஒதுக்கித் தள்ளிட்டு மக்களுக்காக மட்டுமே வந்தான், அது ஒரு தப்பா?

நாங்க கூட்டம் நடத்த தடை ஏன்?

மத்த கட்சிகளுக்கெல்லாம் மாநாடு நடத்துறதுக்கோ, பொதுக்கூட்டம் நடத்துறதுக்கோ இல்ல ஹால் ஃபங்ஷன்ஸ் (Hall Functions) நடத்துறதுக்கோ பர்மிஷன் கொடுப்பாங்க, இடம் கொடுப்பாங்க. ஆனா நமக்கு மட்டும் இடம் கொடுக்க மாட்டாங்க, கொடுக்கவும் விடமாட்டாங்க. இது என்னங்க நியாயம்?

Stalin Sir Operating Procedure

இந்த SOPs-ன்னு சொல்லுவாங்க, அதனுடைய ஃபுல் ஃபார்ம் (Full Form) வந்து Standard Operating Procedure. ஆனா எனக்கு மட்டும் அது Stalin Sir Operating Procedure. இது என்னங்க நியாயம்?

விஜய் எப்போதும் உண்மையானவன்

இந்த விஜய் உண்மையானவன் அப்படிங்கிறது உங்க எல்லாருக்குமே தெரியும். நமக்கு எதிரா சதி செய்றது யாரு? நமக்கு எதிரா சூழ்ச்சி செய்றது யாரு? நமக்கு எதிரா பழி போடுறது யாரு?

யாரெல்லாம் ஒன்னா சேர்ந்து எதிரா செய்றாங்கன்றது உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும். அதனால என்னோட சொந்தங்களாகிய உங்ககிட்ட வந்து நான் நீதி கேட்காம வேற யார்கிட்டதான் போய் கேட்பேன்?

கூட்டணிகள்

செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு, செல்ஃபே எடுக்காத ஒரு அரதப் பழைய அரித்மெடிக் (Arithmetic) கணக்கு. இதெல்லாம் வேலைக்கே ஆகாது, ஆணித்தரமா அடிச்சு சொல்றேன்.

பணம் கொடுத்தால் வாங்குங்க

அப்புறம் இங்க காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம்னு கனவு காண்றாங்கள்ள, அதுவும் இந்த விஜய் வந்ததுக்கு அப்புறம் நடக்கவே நடக்காது.

வண்டி வண்டியா கொண்டு வந்து கொட்டுவாங்க – 1000, 2000, 3000, 4000, 5000-ன்னு… சாமி மேல சத்தியமெல்லாம் வாங்குவாங்க.

விசில் ஊதி அனுப்புங்க

அப்படித்தானே இத்தனை வருஷமா உங்களை ஏமாத்திருக்காங்க? வாங்கிக்கங்க, சந்தோஷமா வாங்கிக்கங்க, எல்லாம் உங்க பணம்தான். வாங்கிக்கிட்டு, அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க! எப்படி? அவங்க செவுட்டுலயே விசில ஊதி அனுப்புங்க” இவ்வாறு விஜய் பேசினார்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in