”நெருக்கடிகள், நிர்பந்தங்கள்”, திமுக கனவு நிறைவேறாது : TVK வெற்றியை தடுக்காது : வேடதாரிகளை வீழ்த்துவோம், விஜய் காட்டம்!

பரப்புரை மேற்கொள்ள திமுக எவ்வளவு நெருக்கடி, நிர்பந்தங்கள் கொடுத்தாலும், தவெக வெற்றியை தடுக்க முடியாது என்று விஜய் தெரிவித்து இருக்கிறார்.
Vijay said that much pressure, compulsion DMK puts on him to campaign, but cannot prevent TVK victory
Vijay said that much pressure, compulsion DMK puts on him to campaign, but cannot prevent TVK victory google
1 min read

உஷாராய் இருக்க வேண்டும்

பெரம்பூரில் இன்று அவர் மேற்கொள்ள இருந்த பிரசாரமும், கடலூரில் நாளை மேற்கொள்ள இருந்த ரோடி ஷோவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள விஜய், ”தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.

மக்களை குழப்ப முயற்சி

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.

மீண்டும் வாய்ப்பு எட்டாக்கனி

பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.

அதிகாரிகளை வைத்து நெருக்கடி

தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.

திட்டமிட்டு ரத்து செய்ய வைப்பது

கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது,

ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் பரப்புரை

அவர்கள் நினைப்பது போல் தவெக ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை.

த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

வெற்றியை தடுக்க முடியாது

த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர்.

ஏப். 21 வரைதான் ஆட்டம்

இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.

Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” என்று அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in