

சாலை மார்க்கமாக காரில் வந்த விஜய்
vijay salem meeting ஈரோடு கூட்டத்தை தொடர்ந்து, 55 நாட்களுக்கு பிறகு சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலத்தில் விஜய் கூட்டம்
இதற்காக சென்னையில் இருந்து சேலத்திற்கு தனி விமானத்தில் சென்ற விஜய் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அவருக்கு சாலை எங்கிலும் கட்சி தொண்டர்கள் முதல் ரசிகர்கள் வரை அவரது காரை சூழ்ந்து ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு கையசைத்தபடி, உற்சாகப்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்தடைந்தார்.
தமிழ்நாடு தான் எனது வீடு
பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், “தைரியம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை, பவர். நம்மை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடும்போதுதான் நம்மை யாருனு காட்டணும்னு உத்வேகம் வருது” என்றார்.
"விஜய் வீட்டை விட்டு வெளியே வா என சொல்பவர்களுக்கு என் வீடு எது என தெரியுமா?" என்று கேள்வி எழுப்பிய விஜய், "தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலம். எனக்கு அதுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கின்றனர்.
அனைவரும் என் உறவு, என் சொந்தம். 8 கோடி மக்களுக்கு உடன் இருக்க போவது நான்தான்” என்றார்.
Stalin Sir operating procedure ஆக இருக்கிறது
"விஜய் ஓட்டு கேட்டு மட்டும் வரவில்லை, நீதி கேட்டு வந்துள்ளேன். விஜய் அரசியலுக்கு வந்தது தப்பா? மற்ற கட்சிகள் கூட்டம் நடத்த இடம் கொடுப்பார்கள், ஆனால் நமக்கு இடம் தர மறுக்கிறார்கள்.
இதைத்தான் ஆங்கிலத்தில் SOP என்பார்கள். ஆனால் இங்கு Stalin Sir operating procedure ஆக இருக்கிறது” என்று விமர்சித்தார். "Self-ஏ எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு வேலைக்கே ஆகாது என்றும் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் கணக்கெல்லாம் இனி நடக்காது" என்றும் அவர் தெரிவித்தார்.
====================