DMDK : 21 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றம் செல்லும் தேமுதிக : ராஜ்யசபா எம்பியாகிறார் ‘எல்.கே. சுதீஷ்’

கட்சி தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதிக்கிறது விஜயகாந்தின் தேமுதிக. ராஜ்யசபா எம்பியாகிறார் எல்கே. சுதீஷ்.
Vijayakanth's DMDK entering Parliament for the first time, after 21, LK Sudhish becomes  MP
Vijayakanth's DMDK entering Parliament for the first time, after 21, LK Sudhish becomes MPgoogle
1 min read

37 இடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல்

Vijayakanth's DMDK is entering Parliament for the first time, 21 years after the party was formed. LK Sudhish becomes an MP : ராஜ்யசபாவில் பதவிக்காலம் நிறைவுபெறும் எம்பிக்களின் இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதியவர்கள் தேர்வு செய்யப்படுவது, சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதற்கான தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. போட்டி இருந்தால் மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், திமுக 4 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற முடியும்.

திமுக வேட்பாளர்கள்

திமுக சார்பில் 2 பேர், அதாவது திருச்சி சிவா, கான்ஸ்டைன்டன் ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு இடம் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

திமுக கூட்டணியில் தேமுதிக

2005ல் தொடங்கப்பட்ட தேமுதிக முதன்முறையாக திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கிறது. அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எத்தனை இடங்கள் என்பது உறுதி செய்யப்படும்.

ராஜ்யசபா எம்பியாகும் எல்.கே. சுதீஷ்

அதன்படி, ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ் போட்டியிடுவார் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து உள்ளார். எல்கே சுதீஷ் தேமுதிக பொருளாளராக உள்ளார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் வேட்புமனுவை வைத்து எல்.கே.சுதீஷ் வழிபட்டார். இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் சுதீஷ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

2025ல் தொடங்கப்பட்ட தேமுதிக

திராவிட கட்சிகளுக்கு அதாவது திமுக, அதிமுகவை எதிர்க்க, தேமுதிக 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் எதிர்த்து விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தேமுதிக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுகிறது.

தேமுதிகவின் கனவு நிறைவேறியது

2011 முதல் 2016 வரை தேமுதிகவிற்கு 29 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது கூட மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கவில்லை. 2013ம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது தேமுதிக.

இரு முறை மாநிலங்களவை எம்.பி. பதவியை கொடுப்பதாக வாக்குறுதி அளித்த அதிமுக, அதை நிறைவேற்றவில்லை.

இதையடுத்து திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுகிறது.

21 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றம் செல்கிறது தேமுதிக.

=============================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in