கடும் எதிர்ப்பு எதிரொலி :விஜய்​ ஜோதிடர் ராதன் பண்​டிட் நியமன உத்தரவு ரத்து : அரசாணை வெளியிடு

விஜய்​யின் ஜோதிடர் ராதன் பண்​டிட் 2ன் அரசு உத்தரவு தடைசெய்யப்பட்டு அரசாணை வெளியிடு
Vijay's astrologer Radhan Pandit 2's government order banned and government order issued
Vijay's astrologer Radhan Pandit 2's government order banned and government order issued google
1 min read

அரசு பணிக்கான உத்தரவு ரத்து

விஜய்​யின் ஜோதிடர் ராதன் பண்​டிட் வெற்றிவேல் முதல்​வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ள குறிப்பில்

இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்புப் பணி (அரசியல்) அதிகாரியாக நியமிப்பது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதன்மூலம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை

இது குறித்து தமிழக அர்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்த குறிப்பில் முதல்​வரின் அரசி​யல் விவ​காரங்​களைக் கவனிப்​ப​தற்​கான சிறப்பு அதி​காரி​யாக ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் நியமிக்​கப்​படு​கிறார்.

அவர் பொறுப்​பேற்​கும் தேதியி​ல் இருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும். இதற்கான பணி விதி​முறை​கள் மற்​றும் நிபந்​தனை​கள் குறித்​துத் தனி​யாக அறிக்கை வெளி​யிடப்​படும்’ என குறிப்​பிட்டிருந்தது

எழுந்த கண்டனங்கள்

முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்தன

சட்டப்பேரவையில் எழுந்த கண்டனங்கள்

இன்று நடந்த சட்டப்பேரவி கூட்டத்தொடரில் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா இவரை நியமனம் செய்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்

தொடர் எதிர்ப்பு : நியமனம் ரத்து

ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனத்துக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு வலுத்த நிலையில், தவெக அரசு அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது அரசாணை வெளியிட்டுள்ளது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in