Virus Fever: பரவும் வைரஸ் காய்ச்சல் : முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

Virus Fever in Tamil Nadu : தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து இருப்பதால், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்ககளுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை.
Virus Fever in Tamil Nadu
Virus Fever in Tamil Nadu
1 min read

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் :

Virus Fever in Tamil Nadu : இரண்டு வாரங்களாக தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும் :

குளிர்ச்சியான பகுதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்(Virus Fever Treatment in Tamil) என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முகக் கவசம் அணியுங்க :

மேலும், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள்(Virus Fever Symptoms in Tamil) இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க :

முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

வைரஸ் கண்டறியப்பட்டால், தடுப்பு நடவடிக்கை :

மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் உள்ளவர்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வைரஸ் கண்டறியப்பட்டால், அதன் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு யோசனை :

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ(Virus Fever Health Tips) வேண்டும். குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். சானிடைசரை பயன்படுத்தலாம்.

சுத்தம் இல்லாத கைகளால் முகத்தை தொடக் கூடாது. இதன் மூலம் வாய் வழியாக வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க : கருவாய்ப் புற்றுநோய் இலவச தடுப்பூசி : பயிற்சியைத் தொடங்கிய அரசு

இருமும் போதும், தும்மும் போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீர்த்துளிகள் பரவுவதை தடுக்கலாம்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் பரவுவதை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டயர், பழைய பொருட்கள், பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும்.

=========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in