பதவியை ராஜினாம செய்த அமைச்சர்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விராலிமலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றார் , இந்த தனது பதவியை ராஜினாம செய்வதாக, கூறி அதற்கான கடிதத்தினையும் சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கியிருந்தார் , மேலும் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
காலியான தொகுதி என அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி .விஜயபாஸ்கர் வெற்றி பெற்ற விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானது என்று சட்டப்பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார், இத்ன இந்த தொகுதியிலும் விரைவில் இடைத்தேர்தலானது நடைப்பெற இருக்கிறது
ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்தவர்கள்
ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் , பேரவை தலைவரை சந்தித்து ராஜினாம கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம்
வழங்கி விட்டு உடனடியாக தவெகவில் இணைந்தனர் , இது அதிமுகவிலும் , அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்
சட்டப்பேர்வை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் , திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாம செய்திருந்தார் ,
இந்த நிலையில் இந்த தொகுதியையும் சேர்த்து , ஏற்கனவே அதிமுக 4 அமைச்சர்கள் ராஜினாம செய்த தொகுதி ,இவற்றறோடு விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த தொகுதியையும் சேர்த்து 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலானது விரைவில் நடைபெற இருக்கிறது.
=================