மதுராந்தகம் இடைத்தேர்தல் : கடும் போட்டியில் தவெக, திமுக மற்றும் அதிமுக! வெற்றி யாருக்கு?

மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தவெக, திமுக, அதிமுக இடையே கடும் போட்டி.
Vote counting for the Maduranthakam by-election has begun; a fierce contest is underway among TVK, DMK, and AIADMK.
Vote counting for the Maduranthakam by-election has begun; a fierce contest is underway among TVK, DMK, and AIADMK.source:google
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கப் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தபால் மற்றும் எலக்ட்ரானிக் வாக்கு பதிவு எண்ணிக்கை

காலை 8 மணிக்கு முதற்கட்டமாகத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தத் தொகுதியில் மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

வாக்குப்பதிவு சதவீதம் மற்றும் முதன்மை வேட்பாளர்கள்

கடந்த அக்டோபர் 6 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இத்தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்:

தவெக: மரகதம் குமரவேல்

திமுக: பரந்தாமன்

அதிமுக: கணிதா சம்பத்

நாம் தமிழர் கட்சி: ஜானகி ராமன்

எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்

மதுராந்தகம் தொகுதியில் ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக இடையே முக்கோணப் போட்டி நிலவுவதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே கட்சி முகவர்களும் தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்போடு திரண்டுள்ளனர்.

9.30 மணி நிலவரம்

மரகதம் குமரவேல் (தவெக) 3,571 வாக்குகள்

பரந்தாமன் (திமுக) 6,006 வாக்குகள்

கணிதா சம்பத் (அதிமுக) 4,301வாக்குகள்

ஜானகிராமன் (நாம் தமிழர்) 154

6ஆம் சுற்று கள நிலவரம்:

மரகதம் குமரவேல் (தவெக) : 24,800

பரந்தாமன் (திமுக): 15,769

கணிதா சம்பத் (அதிமுக) : 14,112

ஜானகிராமன் (நாம் தமிழர்): 332

சுகந்தி (இந்திய.கம்யூ) : 156

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in