வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் கோவை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம்
இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது
இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது படி கடலோர கர்நாடக பகுதிகளிலிருந்து கடலோர ஆந்திர பகுதிகள் வரை சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிபிட்டுள்ளது
கனமழை பெறும் மாவட்டங்கள்
வானிலை மைய முன்னறிவிப்பு படி , திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது
10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும், 11-ம் தேதி நீலகிரி, கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னையின் வெப்பநிலையை பொறுத்த வரையில்
வானிலை மையம் தெரிவித்துள்ளது படி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம் அறிவுறுத்தல்
வானிலை முன்னறிவிப்பின் படி ,தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 12-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது
தென்மேற்கு பருவ மழை எதிரொலி : அதிக மழை பொழிவு பெற்ற மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 11 செமீ, நாலுமுக்கில் 10 செமீ, காக்காச்சியில் 9 செமீ, கோவை மாவட்டம் உபாசி, சின்னக்கல்லார்,
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தலா 8 செமீ, கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனா, கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
================