விவசாயம், மீன்வளம் காக்கும் மோடி அரசு : தமிழகத்திற்கு வரப்பிரசாதம்

PM Modi Welfare Schemes : நரேந்திர மோடி அரசு விவசாயம், மீன்வளத்துறையில் செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள், தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
welfare schemes by the Modi government in agriculture and fisheries, benefited to Tamilnadu
welfare schemes by PM Modi government in agriculture and fisheries, benefited to Tamilnadu Paddy Crops - Fisherman with Fishing Boat
2 min read

விவசாயம், மீன்வளத்துறை திட்டங்கள்

PM Modi Welfare Schemes : மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி விவசாயத்துறைக்கு அளித்து வரும் பேராதரவால், தமிழக விவசாயிகள் எழுச்சி பெற்று இருக்கிறார்கள். மீன்வளத்துறையில் செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களும் அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. பணப் பரிமாற்றம், காப்பீடு, மண் வளம், மீன்வளம் தமிழக விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு எத்தகைய பயன்களை அளித்து வருகிறது. இதற்கான மத்திய அரசின் திட்டங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

விவசாய நலத் திட்டங்கள்

தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் மீன்வளத் துறைகளை நிலைமை உண்மையிலேயே மாறி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. PM-KISAN மூலம் நேரடி நிதி உதவி முதல் PMFBY மூலம் பயிர் பாதுகாப்பை உறுதி செய்வது வரை அனைத்தும் மாற்றம் கண்டு இருக்கிறது. 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய PM-KISAN திட்டம் தமழகத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி ஆதரவை வழங்கி அவர்களுக்கு பயனளித்து வருகிறது. இவற்றின் காரணமாக தமிழக விவசாயிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.

99% பேர் பயன் பெற்றுள்ளனர்

பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் மூலம், தமிழகத்தில் மட்டும் 22 லட்சத்து 50 ஆயிரத்து 180 விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். மார்ச் நிலவரப்படி இவர்களுக்கு 11 ஆயிரத்து 855 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி கிடைத்து இருக்கிறது. இதில் சாதனை என்னவென்றால் 99 சதவீத பண பரிமாற்றம் எந்த குறைபாடும் இன்றி வழங்கப்பட்டு இருக்கிறது.

நீர்ப்பாசன அமைப்புகள் மேம்பாடு

மத்திய அரசு வழங்கும் இந்த நிதி, விவசாயிகளின் அன்றாட செலவுகள், விவசாய பணிகளை திட்டமிட உதவிகரமாக இருக்கிறது. பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனாவின் ( Pradhan Mantri Krishi Sinchai Yojana) கீழ், நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் நீர் பயன்பாட்டை மேம்படுத்துவதில் தமிழகம் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது.

9,35,176 ஹெக்டேர் நிலம் மேம்படுத்தப்பட்டு, 14 மாவட்டங்களில் 166 கிணறுகள் கட்டப்பட்டு, நீர்பாசன பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு மூலம் தமிழக விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

ஃபசல் பீமா யோஜனா

பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளின் போது, விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இதுவரை 14 ஆயிரத்து 741 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் பயிர்கள் சேதமடையும் போது, விவசாயிகள் நிதி ரீதியாக பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு, அவர்களின் நம்பிக்கை அதிகரிக்க செய்கிறது.

மண் சுகாதார அட்டை திட்டம்

மத்திய பாஜக அரசின் மண் சுகாதார அட்டை (SHC) திட்டம், விவசாயிகள் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் தேவையான தரவுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 52 லட்சத்து 51 ஆயிரத்து 840 தரவுகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு இருக்கின்றன. SHC மூலம் மண் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைத்து அவர்கள் பயன் பெறுகின்றனர். இதன் காரணமாக சிறந்த மகசூல் கிடைப்பதோடு, உரங்கள் பயன்படுத்தப்படுவதும் கணிசமாக குறைகிறது.

மீன்வளத்துறை திட்டங்கள்

பிரதமர் மோடியின் மீன்வளத் துறைக்கு ஊக்கம் என்பது, நிலையான மீன்வளர்ப்பை ஊக்குவிக்க அவசியமான வளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குகிறது. இதன்மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மீனவர்கள் மற்றும் பெண் சுய உதவிக்குழுக்களில் பயனடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 264. இந்த திட்டத்திற்காக 866 கோடி ரூபாய் செலவிடப்பட்டு அதன் மூலம், மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவிகளை வழங்குதல், மீன்பிடி படகுகளை மேம்படுத்துதல், புதிதாக குளங்களை நிறுவுதல், மீன்வளர்ப்பை ஊக்குவித்தல், கூட்டு மீன் வளர்ப்பு, ஆகிய பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகள், மீனவர்களுக்கு பெரும் பயன்

மொத்தமாக பார்த்தால், பணப் பரிமாற்றம் முதல் காப்பீடு வரை, மண் ஆரோக்கியம் முதல் மீன்வளம் வரை, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தமிழக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உரிய பயன் பெறுவதை உறுதி செய்கிறது. இதன் காரணமாக விவசாயம் என்பது உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற நிலை மாற்றப்பட்டு, வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கான சக்தி வாய்ந்த இயந்திரமாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in