நமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது - ஆளுநர் ஆர்.என்.ரவி

நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
நமது கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது - ஆளுநர் ஆர்.என்.ரவி
https://x.com/rajbhavan_tn
1 min read

தமிழக ஆளுநர் மாளிகை மேற்கு வங்க மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால் மேற்கு வங்கத்தில் அதன் எதிர்வினை இருக்கும். அதேபோல் மேற்கு வங்கத்தில் ஏதாவது நடந்தால் அதன் எதிர்வினை தமிழகத்தில் உணரப்படும்.

மேற்கு வங்கம் தனியாக பிரிக்கப்பட்டபோது தமிழகத்தில் அதற்கு எதிர்வினை இருந்தது. மகாகவி பாரதியாரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வங்கக்கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி பல கவிதைகளை படைத்துள்ளார். மேற்கு வங்கத்துக்கும் தமிழகத்துக்கும் சிறிய அளவிலான தொடர்பு இருக்கும்போதே அந்த மாநிலத்தில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் தமிழகத்துக்கு வந்துசெல்வர். ஆனால், காலப்போக்கில் இந்த ஒற்றுமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது. மக்கள் மொழியால் தங்களை பிரித்துக் கொண்டனர்.

ஆனால் நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் வாழும் மேற்கு வங்க மக்கள் அதை உணர்ந்து வாழ்கின்றனர்.

இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in