”டெங்கு, உண்ணி காய்ச்சல்” : தமிழகத்தை அச்சுறுத்தும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கை தீவிரம் : மக்களுக்கு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக உண்ணி காய்ச்சலும், அதிகரித்து இருக்கிறது.
While dengue fever is spreading rapidly in Tamil Nadu, tick fever is also on the rise
While dengue fever is spreading rapidly in Tamil Nadu, tick fever is also on the risesource:thamizhalai,ai generated
2 min read

பகலில் வெயில், இரவில் மழை

சூப்பர் எல் நினோ தாக்கத்தால், தமிழ்நாட்டில் பகலில் வெயில் வாட்டுகிறது. மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கிறது.

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

இதன் காரணமாக, டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழைக்காலம் தொடங்கும் போதெல்லாம், மக்களை அச்சுறுத்தும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக டெங்கு காய்ச்சல் உருவெடுக்கிறது. இந்த ஆண்டும் டெங்குவின் தாக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஏராளமானோர் சிகிச்சை

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. மருத்துவமனைகளில் உள்ள டெங்கு காய்ச்சல் வார்டுகள், நிரம்பி வழிகின்றன.

கொசு ஒழிப்பு - நடவடிக்கை தீவிரம்

டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசுக்களை ஒழிக்கவும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒருபக்கம் டெங்கு பாதிப்பு என்றால், இன்னொரு பக்கம் உண்ணி காய்ச்சலும் அதிகரித்து வருகிறது.. காய்ச்​சல் இருந்​தால் உடனே மருத்​து​வ​மனைக்கு செல்ல வேண்​டும் என்று பொது சுகா​தா​ரத்​துறை அறிவுறுத்தி உள்ளது.

உண்ணி காய்ச்சல் - மாணவர் உயிரிழப்பு

சென்னை அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் ஒரு​வர் டெங்கு காய்ச்​சலால் உயி​ரிழந்​த​தாக தகவல் வெளி​யான நிலை​யில், இதை மறுத்த சுகா​தா​ரத்​துறை ‘ஸ்க்​ரப் டைபஸ்’ என்ற உண்​ணிக் காய்ச்​சல் பாதிப்பு தான் உயி​ரிழப்​புக்கு காரணம் என்று தெரி​வித்​தது.

பாக்டிரீயா கிருமியால் வரும் காய்ச்சல்

உண்​ணிக் காய்ச்​சல் என்​பது பாக்​டீரியா கிரு​மி​யால் வரும் காய்ச்​சல் ஆகும். ஆள் உயரத்​துக்கு வளரும் புல், புதர்​கள் மற்​றும் வயல்​வெளி​களில் வாழும் ஒரு வகை உண்ணி மற்​றும் பூச்சி கடிப்​ப​தன் மூலம் இந்த நோய் பரவு​கிறது.

முன்பு காடு​கள் மற்​றும் வயல்​வெளி​களில் வேலை பார்ப்​பவர்​களுக்கு மட்​டுமே இந்த நோய் பரவி வந்​தது. ஆனால், தற்​போது பரு​வநிலை மாற்​றம் மற்​றும் மக்​களின் இடப்​பெயர்வு காரண​மாக அனைத்து இடங்​களி​லும் பரவலாக நோய் காணப்​படு​கிறது.

அச்சம் கொள்ளத் தேவையில்லை

ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை இந்த காய்ச்​சலின் பாதிப்பு அதி​க​மாக இருக்​கும். இந்த காய்ச்​சலை கண்டு பொது​மக்​கள் அச்​சப்பட தேவை​யில்​லை. மற்ற காய்ச்​சலை போன்று சாதா​ரண​மாக உடல்​வலி, பசி​யின்மை போன்ற அறிகுறிகள் இருக்​கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

“வயல்​வெளி​கள், புல்​வெளி​களில் நடக்​கும் போது, பேன்ட், ஷூ, முழு கை சட்டை அணிய வேண்​டும். டெங்கு காய்ச்​சல் போல், அதிக காய்ச்​சல், தலை​வலி, உடல் சோர்​வு, வறட்டு இரு​மல் போன்​றவை இருக்​கும். குறிப்​பாக, 4 மணிக்கு காய்ச்​சல் இல்​லாமல் இருந்​தவருக்​கு, 4:15 மணி​யள​வில் அதி​கள​வில் காய்ச்​சல் பாதிப்பு இருக்​கும்.

உண்ணிக் காய்ச்சலை ஆரம்ப நிலை​யில் கண்​டறிந்​தால் குணப்​படுத்​தலாம். உரிய சிகிச்சை பெறா​விட்​டால், நுரை​யீரல் பாதிப்​பு, மூளை பாதிப்​பு, இதய பாதிப்பு ஏற்​படும். அவ்​வாறு வந்​தா​லும் சிகிச்சை அளிக்​கப்​படும்.

ஆனால், இணை நோ​யாளி​கள் தாமத​மாக வரும்​போது உயி​ரிழப்பு ஏற்​படும். இந்த நோய்க்​கான பரிசோதனை அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் செய்​யப்​படு​கிறது.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் உயி​ரிழப்​புக்கு உண்​ணிக் காய்ச்​சல் எனப்​படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு தான் காரணம்.

டெங்கு போன்றே காய்ச்​சல், தலை​வலி, வாந்தி என இருக்​கும். பூச்சி கடிக்​கும் இடத்​தில் ஒரு தழும்பு போன்ற வடு இருக்​கும்.

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று விளக்கம் அளித்தார்.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in