”2031க்குள் முதியோர்கள் அதிகரிப்பு, வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை சரிவு” : வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்...!

2031ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: பணிபுரிவோரின் எண்ணிக்கை குறையும் என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
white paper states that by 2031, the elderly population in Tamil Nadu will increase
white paper states that by 2031, the elderly population in Tamil Nadu will increasegoogle
1 min read

தமிழக நிதி அமைச்​சர் மரிய வில்​சன் வெளி​யிட்ட வெள்ளை அறிக்​கை​யில் கூறப்பட்டு இருப்பதாவது :

* வெள்ளை அறிக்கை 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால வரவு செலவு திட்ட மதிப்​பீடு​களை ஆய்வு செய்​கிறது.

* மாநிலத்​தின் மொத்த வரி வரு​வாய் ரூ.2,29,579 கோடி​யாக, அதாவது 19 சதவீத வளர்ச்​சி​யுடன் கணிக்​கப்​பட்​டுள்​ளது.

* உண்​மை​யான வளர்ச்சி விகிதம் சுமார் 8 சதவீத​மாகவே இருக்​கும். வருவாய் சுமார் ரூ.2,08,000 கோடி​யாக மட்​டுமே இருக்​கும்.

* வரு​வாய் பற்​றாக்​குறை 2026-27-ம் ஆண்​டில் ரூ.90,500 கோடியை எட்​டக்​கூடும்.

* நிதிப் பற்​றாக்​குறை ரூ.1.22 லட்​சம் கோடி ரூபாய்க்கு மாறாக ரூ.1.64 லட்​சம் கோடி ரூபாயை நெருங்​கக்​கூடும்.

* தமிழகத்​தில் முதி​ய​வர்​களின் பங்கு 2011-ம் ஆண்​டில் 10.6 சதவீத​மாக இருந்த நிலை​யில், 2031ம் ஆண்​டுக்​குள் 18.2 சதவீத​மாக உயரும்.

* முதி​யோர் சார்ந்​திருக்​கும் விகிதம் 2036-ம் ஆண்​டுக்​குள் 32.7 சதவீத​மாக உயரும்.

* பணிபுரி​யும் வயதினர் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தால், வரி செலுத்​து​வோரின் எண்​ணிக்​கை​யும் குறை​யும்.

* அதி​கரித்து வரும் முதி​ய​வர்​களின் எண்​ணிக்கை சமூகப் பாது​காப்பு மற்​றும் சுகா​தார சேவை​களுக்​கான செல​வினங்​களை அதி​கரிக்​கச் செய்​கிறது.

* இத்தகைய விளைவுகள் மாநிலத்தை கடன் வலையை நோக்கி தள்​ளும் என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in