

விரைவில் சட்டமன்ற தேர்தல்
PMK Mango Symbol Issue Case : தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவிலேயே நடைபெற உள்ளது. தேர்தல் அமைதியாக முறையில் எந்த குழப்பமும் இன்றி நடைபெற வேண்டும் எனும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு
தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த வாரம் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
பாமக பிளவு
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ்க்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இதனால் தற்போது பாமக கட்சி இரண்டாக பிளவுபட்டு உள்ளது. பாமக கட்சியின் நிறுவனர் தான் தான் என இருவரும் தனித் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
பாமக யாருக்கு?
பாமக நிறுவனர் யார்? மாம்பழச் சின்னம் யாருக்கு? என ராமசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வந்தது.
இதே நேரத்தில் தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் முகவரிக்கு, பாமகவுக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கடிதம் அனுப்பியது.
2 மனுக்கள்
இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ், 2025 ஆம் ஆண்டி அன்புமணி பதிவிக்காலம் முடிந்துவிட்டது.
அதனால் எனக்கு தான் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்ப வேண்டும் என்று கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மாம்பழச் சின்னம்
இதைத்தொடர்ந்து ராமதாஸ் மேலும் 2 மனுக்களை தாக்கல் செய்தார். முறையே அந்த மனுக்கள் மாம்பழ சின்னத்தை முடக்ககோரியும், நான் தலைவராக இருக்கும் பாமகவிற்கு மட்டும் மாம்பழச் சின்னம் உரியது .
தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும்
பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
விசாரணைக்கு உகந்தது அல்ல
ராமதாஸ் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது , இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் இந்த இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிவில் கோர்ட்டை அணுக வேண்டும்
மேலும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக நீங்கள் சிவில் கோர்ட்டை அணுகி தான் தீர்வு பெற வேண்டும் என்றும், தந்தைக்கும் மகனுக்கும் மத்தியில் என்ன பிரச்சனை உள்ளது ? என்றும்
நீதிமன்றம் கேள்வி ?
தந்தையின் பேச்சை மகன் கேட்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு ராமதாஸ் தரப்பில் இருந்து இல்லை என்று பதிலளிக்கப்பட்டது.
ராமதாசுக்கு அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை
தொடர்ந்து மாம்பழ சின்னத்தை முடக்ககோரிய ராமதாசின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, ராமதாசுக்கு கோர்ட்டின் நேரத்தை வீண் அடிப்பதற்காக அபராதம் விதிக்க நேரிடும் எண்றும் வழக்கை தள்ளுபடி செய்வதாக அதிரடி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆஜரானார். அவர் பேசும் போது, பாமக அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி . அதனால் ஐகோர்ட் இதில் தலையிட முடியாது என்றார்.
மாம்பழ சின்னத்தை முடக்கி வைக்க முடியாது
அதேபோல் மாம்பழ சின்னத்தை ராமதாசுக்கு ஒதிக்கிவைத்துவிட்டு பிறருக்கு வழங்காமல் முடக்கி வைக்கவும் முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.