ஆக. 28 மேட்டூர் செல்கிறார் முதல்வர் விஜய்? : அணையில் இருந்து தண்ணீர் திறப்பு, உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு...!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், முதல்வர் விஜய் நேரில் திறந்து வைக்க ஏற்பாடுகள் தீவிரம்; விவசாயிகள் மகிழ்ச்சி!
With the Mettur Dam set to be opened for Cauvery delta irrigation, preparations are underway for cheif minister
With the Mettur Dam set to be opened for Cauvery delta irrigation, preparations are underway for Chief Minister Google
1 min read

மேட்டூரில் தீவிரமடையும் ஏற்பாடுகள் :

முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு நீர்வளத்துறை மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அணையின் மதகு பகுதிகளில் தேவையான பணிகள், நிகழ்ச்சி மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளும் அணைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை :

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 26 காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 88.84 அடியாக இருந்ததாகவும், நீர்வரத்து அதிகரித்து வருவதால் விரைவில் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும்போது, பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்து அரசு முடிவு மேற்கொள்கிறது.

இந்த ஆண்டு தாமதமான தண்ணீர் திறப்பு :

ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் வழக்கமான தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தண்ணீர் திறப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது

16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன் :

மேட்டூர் அணை நீர் மூலம் காவிரி டெல்டா பகுதியில் உள்ள சுமார் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயத்திற்கு மேட்டூர் அணை நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது.

டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கை :

நீண்ட தாமதத்திற்குப் பிறகு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் டெல்டா விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 28-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால், காவிரி டெல்டா பகுதிகளில் அடுத்தகட்ட சாகுபடி பணிகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in