”காலியாகும் மதிமுக கூடாரம்” : கூட்டணியை முறித்த வைகோ : 24 மணிநேரத்தில் திமுகவுக்கு தாவிய மூத்த நிர்வாகிகள்...!

கூட்டணியை வைகோ முறியடித்த 24 மணி நேரத்திற்குள், 150க்கும் மேற்பட்ட மதிமுக மூத்த நிர்வாகிகள், திமுகவிற்கு தாவி இருக்கிறார்கள்.
Within 24 hours of Vaiko breaking the alliance, more than 150 senior MDMK functionaries joined DMK
Within 24 hours of Vaiko breaking the alliance, more than 150 senior MDMK functionaries joined DMKgoogle
1 min read

திமுக கூட்டணியில் மதிமுக

9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை திமுகவுடன் இணைந்தே மதிமுக சந்தித்து இருக்கிறது.

மக்களவை தேர்தலில், திருச்சி தொகுதியில் போட்டியிட்ட வைகோ மகன் துரை வைகோ வெற்றி பெற்று எம்பியானார். சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 4 தொகுதிகளில் களம் கண்ட மதிமுக 2ல் வெற்றி பெற்றது.

துரை வைகோவிற்கு பதவி

2022ம் ஆண்டு மதி​முக​வுக்​குள் தனது மகன் துரை வைகோவை கொண்டு வந்த ​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் வைகோ, அவரை முதன்​மைச் செய​லா​ளர் ஆக்கினார்.

எதிர்த்தவர்கள் வெளியேற்றம்

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்த கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள் திருப்​பூர் துரை​சாமி, டி.ஆர்​.ஆர்​.செங்​குட்​டு​வன், புல​வர் செ.செவந்​தி​யப்​பன், பொடா அழகுசுந்​தரம் உள்​ளிட்​ட​வர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

திமுகவில் இணைய தொடர் முயற்சி

அதிருப்தி நிர்​வாகி​கள் பலரும் நீண்ட நாட்​களாகவே திமுக​வில் இணைய முயற்சி செய்து வந்​தனர். ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் மதி​முக நீடித்​த​தால், அதிருப்​தி​யாளர்​களைக் கட்​சி​யில் இணைக்க திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தொடர்ந்து மறுத்து வந்​தார்.

மதிமுகவிற்கு திமுக பச்சைக்கொடி

இந்​நிலை​யில், திமுக கூட்​ட​ணியி​லிருந்து வில​கு​வ​தாக சென்​னை​யில் நடை​பெற்ற மதி​முக பொதுக்​குழு கூட்​டத்​தில், தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதையடுத்து மதி​முக அதிருப்தி நிர்​வாகி​களை இணைத்​துக் கொள்ள திமுக தலைமை பச்​சைக் கொடி காட்​டியது.

திமுகவில் இணைந்த நிர்வாகிகள்

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் ஸ்டா​லினைச் சந்​தித்த மதி​முக முன்​னாள் மாநில, மாவட்ட நிர்​வாகி​கள் தங்​களை திமுக​வில் இணைத்​துக் கொண்​டனர்.

திமுகவில் மதிமுக மூத்த தலைவர்கள்

முக்​கிய​மாக, மதி​முக​வின் மூத்த தலை​வர்​களான புல​வர் செ. செவந்​தி​யப்​பன், டி.ஆர்​.ஆர்​.செங்​குட்​டு​வன், பொடா அழகுசுந்​தரம், ஆர்​.எம்​.எஸ்​.சேகர், விடு​தலை​வேந்​தன், டி.ஆர்​.ஆர்​.ம​தி​யழகன் என சிவகங்​கை, திரு​வள்​ளூர், விருதுநகர், திருப்​பூர் ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்த வழக்​கறிஞர்​கள், முக்​கிய நிர்​வாகி​கள் 150-க்​கும் மேற்​பட்​டோர் திமுக​வில் சேர்ந்தனர்.

வைகோவின் நெருங்கிய ஆதரவாளர்கள்

அழகுசுந்​தரம், புல​வர் செவந்​தி​யப்​பன் ஆகியோர் வைகோவுடன் பொடா சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்டு ஓராண்​டு​களுக்​கும் மேலாகச் சிறை​வாசம் அனுப​வித்​தவர்கள் ஆவர்.

இதன் மூலம் மதிமுக கூடாரம் காலியாகி வருவது தெரிகிறது. பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் பல்டி அடித்து இருக்கிறார்கள். அவர்கள் திமுக எம்எல்ஏக்களாக தொடர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இதனால், கூட்டணி மாற்றத்தில் வைகோ எடுத்த முடிவு பெரிய தவறில் முடிந்து விட்டதாக, மதிமுக மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in