இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ1000 வரவு,ரூ.2500 எப்போது ?”தேர்தல் வாக்குறுதி குறித்து தவெக அரசுக்கு மகளிர் கேள்வி ”

ரூ 2500 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது
Women's Rights Grant of ₹1,000 Credited When Will ₹2,500 Be Paid?
Women's Rights Grant of ₹1,000 Credited When Will ₹2,500 Be Paid? google
1 min read

தவெக தேர்தல் வாக்குறுதி

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றினால் மளிருக்கு ரூ2500 உரிமைத்தொகையாக உயர்த்தி தரப்படும் என்று அறிவித்திருந்தது .

இதற்கு முன்னர் திமுக ஆட்சியில் மகளிருக்கும் உரிமைத்தொகையாக மாதம் 1000 வழங்கப்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மாதமும் ரூ1000 வரவு

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய தவெக , மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் , திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

தொடர்ந்து மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கடந்த மாதம் 15-ம் தேதி வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாகவே வரவு இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியில் பயனாளிகள்

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 என்ற வாக்குறுதி குறித்து தவெக அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. மாதம் ரூ.2,500 வாக்குறுதியை நிறைவேற்றாததால் பயனாளிகள் அதிருப்தியும் , ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பும் பெண்கள்

இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கான் உரிமைத்தொகயானது ரூ 2500 ஆக உயர்த்த தரப்படும் என்று தெரிவித்திருந்தது .

கடந்த இரு மாதங்களாக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ரூ1000 மட்டுமே உரிமைத்தொகையாக வரவு வைக்கப்பட்டிருந்தது .இண்டஹ் நிலையில் இந்ததிட்டம் தொடருமா என பெண்கள் அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் அரசுக்கு எழுப்பி வருகின்றனர்.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in