

ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu)
இந்தியக் கோடீஸ்வர தொழிலதிபரும், பன்னாட்டு நிறுவனமான சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹதர் வேம்பு உலக அளவில் பிரபலமானவர்.
2.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை கொண்ட 55வது இந்திய பணக்காரர் இவர் என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பதம்க்ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, சென்னை ஐஐடியில் இளநிலை தொழில்நுட்ப அறிவியல், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் மற்றும் (முனைவர்) பட்டம் பெற்றவர்.
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
Zoho நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் இவர், முறையான பல்கலைக்கழக கல்விக்கு மாற்றாக கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்சார் மென்பொருள் மேம்பாட்டு கல்வியை வழங்க 2004ல் சோஹோ பள்ளிகளை நிறுவினார்.
இவருடைய சோஹோ மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 15 முதல் 20% பேர் கல்லூரிகளில் பட்டம் பெறாத பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் தங்கி அங்கிருந்தவாறே தனது நிறுவனம், பள்ளிகள், தொண்டு பணிகளை ஸ்ரீதர் வேம்பு மேற்கொண்டு வருகிறார்.
திமுக ஆட்சியில் லஞ்சம்
இந்தநிலையில், தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை பதிவிட்டு இருக்கிறார். ” தான் தங்கி பணியாற்றி வரும் பகுதியில் கோவிந்தபேரி கிராமத்தில் "கலைவாணி கல்வி மையம்" என்ற கிராமப்புற பள்ளியை நடத்தி வருகிறார்.
இந்த பள்ளிக்கு முந்தைய ஆட்சி காலத்தில் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறினார். இலவசமாக இயங்கும் பள்ளிக்கு கூட குறிப்பிட்ட தொகை கேட்கப்பட்டதாகவும், அது மட்டுமே வழி என்று சொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெக ஆட்சியில் லஞ்சம் இல்லை
ஆனால் தற்போதைய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, அனுமதிகள் விரைவாகவும், தானாகவும் கிடைத்ததாக அவர் பாராட்டினார்.
முதல்வர் விஜய்க்கு நன்றி
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த நல்ல மாற்றத்தை வரவேற்றார்.
அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன், கடந்த வாரம் தனியார் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் சான்றிதழ்களை எவ்வித லஞ்சமும் இன்றி ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
பள்ளிகளுக்கு விடிவுகாலம்
இந்த உத்தரவு அமலுக்கு வந்த பிறகு, பலர் இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஸ்ரீதர் வேம்புவின் இந்த பாராட்டு, விஜய் தலைமையிலான அரசின் இந்த புதிய முயற்சி உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் இலவச கல்வி நிறுவனங்களுக்கு இது பெரும் உதவியாக அமையும்.
=====