ஃபோன் பேச தெரியுமா? ஜோஹோ வழங்கும் அருமையான வேலை!

ZOHO Recruit : முன்னணி ஐடி நிறுவனமான ஜோஹோவில் இருந்து டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவையான தகுதிகள் குறித்து பார்க்கலாம்.
ZOHO Recruit 2025 Job Vacancy Opening for Technical Support Engineer Position in Chennai
ZOHO Recruit 2025 Job Vacancy Opening for Technical Support Engineer Position in Chennaigoogle
1 min read

ஜோஹோ முண்ணனி

ZOHO Recruit 2025 Job Vacancy : தமிழகத்தின் முண்ணனி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஜோஹோ. தற்பொழுது அரட்டை, உலா என உலக முழுவதும் தற்போதைய சமூக வலைதளங்களை பின்தள்ளி, தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்நிலையில், ஜோஹோவில் இருந்து தொடர் வேலைவாய்ப்புகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

ஜோஹோ வேலைவாய்ப்பு

அதன்படி தற்பொழுது வேலைகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள, ஜோஹோ நிறுவனம் அந்த வேலைக்கான தகுதிகள் குறித்தும் அறிவித்துள்ளது. அதன்படி, டெக்னிக்கல் சப்போர்ட் இன்ஜினியர் (Technical Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆங்கிலம் சரளமாக பேச தெரிய வேண்டும்

தற்போது கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அமெரிக்கா மற்றும் பிரிட்டனர் கஸ்டமர்களுடன் போனில் பேசி அவர்களுக்கு பணி குறித்த சப்போர்ட் வழங்க தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத அனுபவம் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டு வரை Client - facing role-லில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இரவு பணி பார்க்க தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் பிற மாவட்டங்களில் எங்கு சென்றும் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். புதிய டெக்னாலஜியை கற்கும் திறன் இருக்க வேண்டும். குழுக்களுடன் இணைந்தோ, தனியாகவும் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் குறித்த அறிவிப்பு

தற்போதை வரை சம்பளம் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி, திறமையின் மற்றும் அனுபவத்தின் ரீதியாக சம்பளம் வழங்கப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் படிக்க : ZOHO Recruit : வேலைவாய்ப்பை வாரி வழங்கும் ஜோஹோ- மிஸ் பண்ணீடாதீங்க!

சென்னையில் பணி

இதனால் விண்ணப்பத்துக்கான காலஅவகாசம் எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்பதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது என்றும் இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று ஜோஹோ நிறுவனம்(ZOHO Corporation) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பணிக்கான காலியிடம் முடிவதற்கு முன்னரே, தகுதியுடையோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பணிக்கு முயற்சி செய்யுங்கள்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in