

தவறான தகவல் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது :
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது உலகம் முழுவதும் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அந்த சூழலில் மேஜர் மதன் குமார் போன்றவர்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு உண்மையான தகவல்களையும், இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளையும் தெளிவாக எடுத்துரைத்தனர்.
எனவே, இவர்களைப் போன்றவர்களின் பணியை நாம் பாராட்ட வேண்டும். அதேபோல், இந்திய தேசத்தின் மீதும் நமது ராணுவ வீரர்களின் மீதும் அனைவரும் ஆழ்ந்த அன்பையும் முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.
ராணுவ வீரர்கள் குறித்து அண்ணாமலை :
நாட்டுக்காக நமது ராணுவ வீரர்கள் பல்வேறு தியாகங்கள் மேற்கொண்டு வருகிறார்கள் எனவே இந்த புத்தகத்தை அணைத்து நபர்களும் படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அது மட்டும் அல்லாமல் அவர்குளுடைய தியாகம் நாட்டின் மீதான பற்று என அணைத்து விவரங்களையும் நீங்கள் இந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அண்ணாமலை குறிப்பிட்டார்
மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றி அண்ணாமலை :
மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ஒரு வீரனை இந்த உலகம் அறிந்து கொள்ள அமரன் திரை படம் ஒரு பெரிய உதவியாக இருந்தது அது மட்டுமல்லாமல் அவருடைய தாய் மற்றும் தந்தையும் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து விட்டனர் .
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஒப்பீடு :
இந்தியா இன்று இருக்க கூடிய நிலையில் பாக்கிஸ்தான் மிகவும் பின் தங்கி உள்ளது, அது மட்டுமல்லாமல் நம்முடைய பொருளாதாரத்தையும் பாக்கிஸ்தான் பொருளாதாரத்தையும் ஒப்பிடுகையில் வித்தியாசம் என்பது 500 ரூபாய் மற்றும் 25 பைசாவிற்கும் போன்றது என பேசி இருந்தார் .
Gen Z தலைமுறையினருக்கு அண்ணாமலை அழைப்பு :
நமது நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் கட்டாயமாக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் எனவும். அது மட்டுமல்லாமல் அணைத்து இளைஞர்களும் ஏதேனும் ஒரு சீருடை பணியில் சேர முன் வர வேண்டும் என அவர் தெரிவித்தார் .
இந்த எழுச்சி நிகழ்வில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்குளடைய தந்தை மற்றும் பல்வேறு முன்னாள் ராணுவ வீரர்கள் என பலர் கலந்து கொண்டு அவருடைய பேச்சை கேட்டு மகிழ்ந்தனர்