வானிலை முன்றிவிப்பு , 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது .இதன் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், வரும் 13ஆம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,
விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழையும், வரும் 15 முதல் 17ஆம் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
வெப்பநிலையை பொறுத்த வரையில்
வெப்பநிலையை பொறுத்த வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் , வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது
சென்னையை பொறுத்தவரை
சென்னையை பொறுத்த வரையில் , வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றூம் மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
=-==============================