அறிமுகமானது Samsung Galaxy A07 5G : சிறப்பம்சங்கள் என்னென்ன?

Samsung Galaxy A07 5G Launch Date in India : இந்திய சந்தையில் அறிமுகமானது சாம்சங் A சீரிசின், Samsung Galaxy A07-ஃபோனின் விலை, முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
Samsung Galaxy A07 5G has been launch Date in India Samsung Galaxy A07 A07 Specifications, Price, Battery Full Details in Tamil
Samsung Galaxy A07 5G has been launch Date in India Samsung Galaxy A07 A07 Specifications, Price, Battery Full Details in TamilSource : Samsung Galaxy A07 5G
2 min read

சாம்சங் போன்கள்

Samsung Galaxy A07 5G Launch Date in India : ஃபோன் என்றாலே பலரது நினைவுக்கு வருவது சாம்சங் தான். ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ், பிரீமியம் லுக், பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ், ஹேங் ஆகாமல் ஸ்மூத்தாக இயங்குதல் என சாம்சங் பிரியர்கள் எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை.

எத்தனை புதுவகை மாடல்களில் போன் வந்தாலும் சாம்சங் புது மாடலுக்காக காத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் சாம்சங் பட்ஜெட் ஃப்ரெண்லியும் கூட.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் சாம்சங் நிறுவனம் Samsung Galaxy A07 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samsung Galaxy A07 -ன் முக்கிய அம்சங்கள்

Samsung Galaxy A07 பேட்டரி

Samsung Galaxy A07 -ன் முக்கிய அம்சமே அதன் பேட்டரிதான். முந்தைய சீரிசை விட 20 சதவீதம் பெரிய 6,000Ah பேட்டரியாக திகழ்கிறது.

25 W அதிவேக சார்ஜிங் வசதியும் உள்ளது. வேலை நிமித்தமாகவும் சரி, பொழுதுபோக்கு நிமித்தமாகவும் சரி நீண்ட நேரம் தாராளமாக பயன்படுத்தலாம்.

Samsung Galaxy A07 கேமரா

Samsung Galaxy A07 போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும், f/1.8 அப்பர்ச்சர் மற்றும் ஆட்டோஃபோகஸ் தன்மையுடன் 502mp முதன்மை சென்சார் மற்றும் 2mp டெப்த் சென்சார் உள்ளது. தாராளமாக 10x zoom 2 செய்துகொள்ளலாம்.

முன்பக்கத்தில் உள்ள கேமராவானது 8mp செல்ஃபி கேமரா. இது இன்ஃபினிட்டி-யு நாட்ச்சில் பொருத்தப்பட்ட f/2.0 அப்பர்ச்சரை கொண்டுள்ளது.

Samsung Galaxy A07 டிஸ்ப்ளே

Samsung Galaxy A07 120 Hz உடனான 6.7 இன்ச் HD+PLS LCD திரையைக் கொண்டுள்ளது. கேலக்ஸி A சீரிசில் 120 Hz பேனல் கொண்டு செயல்படும் முதல் சாம்சங் மாடல் இதுதான்.

800 நிட்ஸ் மற்றும் தூசி மற்றும் நீர் தெறிப்புகள் முதலானவற்றை தாங்கும் IP54 சிறப்பம்சங்களும் இடம் பெற்றுள்ளது.

பின்புறத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அம்சத்தால் 8.2 மிமீ தடிமனுடன் Samsung Galaxy A07 மெலிதாக அழகாக காட்சியளிக்கிறது.

அதே சமயம் எளிதில் உடையாத வண்ணம் சிறந்த வலிமையையும் வழங்குகிறது.

Samsung Galaxy A07 விலை

Galaxy A சீரிசின் ஒருபகுதியாக சாம்சன் Samsung Galaxy A07 மாடலை நடுத்தர மற்றும் பட்ஜெட் பிரிவுகளுக்கென்றே வெளியிட்டு உள்ளது.

Galaxy A06 5G மாடலைப்போலவே Galaxy A06 5G மாடலும் மலிவு விலையில் கிடைக்கிறது.

Samsung Galaxy A07 இரண்டு விலைகளில் கிடைக்கிறது. ஒன்று 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு கொண்ட அடிப்படை மாடலின் விலையானது ரூ.15,999 இல் தொடங்குகிறது.

மற்றொன்று 6GB RAM மற்றும் 128GB சேமிப்புடன் உள்ளது . இந்த மாடலின் விலை ரூ.17,999. இந்த வகை ஸ்மார்ட்போன் லைட் வைலட், லைட் கிரீன் மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.

Samsung Galaxy A07 கூடுதல் சிறப்பு

Samsung Galaxy 2031ம் ஆண்டுவரையிலான ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் 6 ஆண்டுகள் பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

அதிரடி சலுகைகளுடன் புதுவித சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ள Samsung Galaxy A07 ஃபோனை சாம்சங் பிரியர்கள் ஆர்வமாக வாங்கி வருகிறனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in