

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர்
அனைத்து உலக நாடுகளும் நீண்ச நாட்களாக எதிர்பார்த்த ஈரான், அமெரிக்காவிற்கு நிடையிலான போர் நிறுத்தத்தின் வரைவு ஒப்பந்தம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வரைவு ஒப்பந்தம்
இந்த முக்கியமான விவகாரத்தில், பாகிஸ்தானின் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக சுவிட்சர்லாந்தில் வரும் வெள்ளிக்கிழமை இருதரப்பினரும் பாகிஸ்தான் முன்னிலையில் இந்த வரைவு ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட உள்ளனர்.
14 முக்கிய அம்சங்கள்
கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இஸ்லாமாபாதில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள 14 முக்கிய அம்சங்கள் குறித்த முழு விவரங்களை ஈரானின் அரசு சார்பு செய்தி நிறுவனமான ‘மெஹர்’ வெளியிட்டுள்ளது.
1. ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல்
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
2. இறையாண்மைக்கு மதிப்பு அளித்தல்
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தாங்கள் தலையிட மாட்டோம் என்றும், ஈரானின் இறையாண்மையை முழுமையாக மதிப்போம் என்றும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
3. கடல்வழி முற்றுகையை விலக்குதல்
ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் கடல்வழி முற்றுகையை, ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாட்களுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
4. அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுதல்
ஈரானைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும் அங்கிருந்து திரும்பப் பெறப்படும்.
5. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது
ஈரானின் சிறப்பு ஏற்பாடுகளின் கீழ், 30 நாட்களுக்குள் உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும்.
6. ஏற்றுமதித் தடைகளை நிறுத்திவைப்பது
ஈரானின் கச்சா எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மற்றும் அது தொடர்புடைய இதர ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படும்.
7. எரிபொருள் வருவாயைப் பயன்படுத்துதல்
எரிபொருள் ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கப் பெறும் வருவாயை, ஈரான் நாடு எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி முழுமையாக பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
8. மறுசீரமைப்பு திட்டங்களுக்கான நிதி உதவி
போரினால் பாதிக்கப்பட்ட ஈரானுக்காகக் குறைந்தபட்சம் 30,000 கோடி டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டங்களை வழங்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதியளிப்பது.
9. அணுசக்தி விவகாரப் பேச்சுவார்த்தை
அணுசக்தி விவகாரங்கள் மற்றும் விரிவான தடைகள் நீக்கம் குறித்து ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, இரு நாடுகளும் இணைந்து 60 நாட்கள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தும்.
10. அணு ஆயுதப் பரவல் தடை உறுதிப்பாடு
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் , தாங்கள் இனி அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதில்லை என்ற புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டை ஈரான் வழங்குகிறது.
11. ராணுவக் குவிப்பு மற்றும் புதிய தடைகளுக்கு விலக்கு
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் காலக்கட்டத்தில், பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ குவிப்பை அதிகரிக்காது என்றும், ஈரான் மீது புதிய தடைகளை விதிக்காது என்றும் உறுதியளித்துள்ளது.
12. முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு
பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில், ஈரானின் முடக்கப்பட்ட 2,400 டாலர் (ஆவணத்தின்படி) நிதி விடுவிக்கப்படும். இதில் பாதித் தொகை பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாகவே ஈரானுக்கு வழங்கப்படுவது குறித்து.
13. மேற்பார்வை வழிமுறை உருவாக்கம்
இந்த வரலாற்று ஒப்பந்தம் இருதரப்பிலும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய, ஒரு சிறப்புக் கண்காணிப்பு மேற்பார்வை வழிமுறை உருவாக்கப்படும்.
14. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்
இந்த இறுதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UN Security Council) அதிகாரப்பூர்வ தீர்மானத்தின் மூலம் இறுதி ஒப்புதல் பெறப்படும்.
ஈரானின் முக்கிய நிபந்தனைகளும் தற்போதைய நிலையும்
நிபந்தனை: ஈரானின் முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடை நீக்கம் மற்றும் கடல்வழி முற்றுகை விலக்கு ஆகிய 3 முக்கிய அம்சங்களை அமெரிக்கா முழுமையாக நிறைவேற்றும் வரை, இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்படாது என ஈரான் கடுமையான நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.
விதிவிலக்கு: அதேபோல், சர்வதேச சமூகத்தால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் பிராந்திய ஆயுத குழுக்களுக்கான ஆதரவு ஆகிய விவகாரங்கள், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
======