ஹோர்மூஸ் நீரிணைக்கு 20% கட்டணம் : டிரம்ப் பேச்சால் பரப்பரப்பு : பதிலடி கொடுத்த ஈரான்!

ஹோர்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பிற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது
20% fee for Strait of Hormuz: Trump's remarks spark a stir; Iran hits back.
20% fee for Strait of Hormuz: Trump's remarks spark a stir; Iran hits back. Ai generated
1 min read

ஹோர்மூஸ் நீரிணை , 20 % கட்டணம் வசூலிக்கப்படும்

ஹோர்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாகவும் , அந்த வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கட்டணமாக 20 % வசூலிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ட்ரம்பின் அறிவிப்பு

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரானுடன் அண்மையில் எட்டப்பட்டிருந்த தற்காலிக அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளதாவது

இந்த அறிவிப்பு குறித்து அதிபர் டிரம்ப் , தனத் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

ஹோர்மூஸ் ஜலசந்தி தொடர்ந்து திறந்தே இருக்கும். அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும். இந்த ஆபத்தான பகுதியில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான செலவினங்களை ஈடுகட்ட, நியாயமான முறையில் 20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அறிவிப்பிற்கு பதிலடி தந்துள்ள ஈரான்

அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்கு ஈரான், ஹோர்முஸ் நீரிணையின் உண்மையான பாதுகாவலராக ஈரானே எப்போதும் இருந்து வருகிறது என்றும், அமெரிக்கா அல்ல என்றும் ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பதிலடி தந்துள்ளார்

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

அமெரிக்காவின் அறிவிப்பிற்கு பதிலடி தந்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, "அமெரிக்க அதிபரின் கருத்து முற்றிலும் சரியானது. ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யும் தரப்பினர் தான் அதற்கான சேவை கட்டணத்தைப் பெற வேண்டும்.

அந்த வகையில் இந்த முக்கிய நீரிணையின் பாதுகாவலராக எப்போதும் நாங்களே இருந்து வருகிறோம்; இனியும் என்றென்றும் இதுவே தொடரும் என்று பதிலடி தந்துள்ளார்

மேலும் அமெரிக்கா அறிவித்துள்ள 20% கட்டணம் என்பது நிச்சயமாக மிக அதிகமானது. இந்த நீரிணையின் பாதுகாவலராக திகழும் நாங்கள் எப்போதும் நியாயமாகவே செயல்படுவோம் அதாவது நியாயமான கட்டணத்தையே நிர்ணயிப்போம் என்றும் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருக்கிறார்.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in