

2026-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டவெளியில் இருந்து பூமியை வந்தடையும் நியூட்ரினோ எனப்படும் அரிய துகள்கள் குறித்த ஆராய்ச்சியில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
நியூட்ரினோ என்பது மிகவும் சிறிய மற்றும் அரிதான துகள். இவை மனிதர்கள், கட்டிடங்கள், ஏன் பூமியையே கூட ஊடுருவி செல்லும் தன்மை கொண்டவை.
இதனால் இவை "கோஸ்ட் பார்ட்டிக்கிள்ஸ்" அல்லது "பேய் துகள்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
தென் துருவமான அண்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள IceCube Neutrino Observatory என்ற பிரம்மாண்ட ஆராய்ச்சி மையத்தின் மூலம் விண்வெளியில் இருந்து வரும் நியூட்ரினோக்களை கண்டறியும் முயற்சியில் பிரான்சிஸ் ஹால்சன் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த ஆய்வு, அண்டவெளியில் நிகழும் மிகப்பெரிய வெடிப்புகள் மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து விஞ்ஞானிகள் மேலும் அறிந்துகொள்ள உதவியுள்ளது.
நியூட்ரினோ ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்கியதற்காக பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கும் பிரபஞ்சத்தின் ரகசியங்களை புரிந்துகொள்வதற்கும் முக்கிய பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
முன்னதாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்பியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளன.
===================