ஈரான் இஸ்ரேல் போர் எதிரொலி : வளைகுடா நாடுகளுக்கு செல்லும் 760 விமானங்கள் ரத்து

Israel Iran War : ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் வளைகுடா நாடுகளுக்கு தலைநகர் டெல்லியில் இருந்து செல்லும் 760 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
760 international flights to Gulf countries canceled in response to Iran-Israel war
760 international flights to Gulf countries canceled in response to Iran-Israel wargoogle
1 min read

சர்வதேச விமான சேவை ரத்து

Israel Iran War : டில்லியில் இருந்து 3வது நாளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான செல்லும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .குறிப்பாக 2 நாட்களில் 760 விமான சேவைகளும், இன்று ஒருநாள் மட்டும் 87 சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

விமான புறப்பாடு _வருகை ரத்து

ஈரான் இஸ்ரேல் போர் எதிரொலியியல் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 37 புறப்பாடுகளும், 50 வருகைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

மேலும் மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக, 2 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 760 விமான சேவைகள் ரத்தாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

போர் எதிரொலியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன ,கச்ச எண்ணெய் விலை உயர்வு ஆகியவை அடங்கும்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு-மத்திய அரசு விளக்கம்

ஈரான் இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான சேவை ரத்தால் தவிக்கும் பயணிகளுக்கு அந்தந்த நாடுகள் தேவையான உதவிகளை செய்து வருகின்றன.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in