”946 கோடி லிட்டர் தண்ணீர், டேட்டா சென்டருக்கு செலவழிப்பு“ : அமேசான் அதிகாரபூர்வ அறிவிப்பு...!

டேட்டா சென்டர்களின் எண்ணிக்கையும், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கமும் உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் அமேசானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
9.46 billion liters of water consumed by data centers: Amazon's official announcement.
9.46 billion liters of water consumed by data centers: Amazon's official announcement. google
1 min read

946 கோடி லிட்டர் தண்ணீர் செலவு

அமேசான் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகளவில் உள்ள தனது டேட்டா சென்டர்களைக் குளிர்விக்க 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடும்போது குறைவான அளவே பயன்பாடு : அமேசான் விளக்கம்

946 கோடி லிட்டர் அந்நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள சியாட்டில் பெருநகரம் ஓராண்டில் பயன்படுத்தும் அளாவில் சுமார் 5 சதவீதமாகும் . குறிப்பாக

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் தங்களின் தண்ணீர் பயன்பாடு குறைவுதான் எனவும் விளக்கமளித்துள்ளது

பெரும் விவாத்திற்கு நடுவே அறிவிப்பு

டேட்டா சென்டர்களின் எண்ணிக்கையும், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கமும் உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் அமேசானின் இந்த அறிக்கை வெளியாகிஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இந்த சேவை குறித்து அதன் தலைவர் கூறியதாவது

அமேசான் தனது டேட்டா சென்டர்களில் சுமார் 90% நேரங்களில் காற்றைக் கொண்டே குளிர்விப்பதாகவும், கடுமையான கோடைக்கால நாட்களில் மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துவதாக அதன் வலைச் சேவைகளின் துணைத் தலைவரான கெர்ரி பெர்சன் தெரிவித்துள்ளார்.

குளிரூட்டும் முறையை பற்றி அதன் தலைவர் கூறும்போது

உதாரணமாக, ஃபீனிக்ஸ் பகுதி மற்றும் சவூதி அரேபியா போன்ற, நீர் பற்றாக்குறை உள்ள சில பிராந்தியங்களில் உள்ள ஆலைகள், குளிரூட்டுவதற்காக வெளிப்புற நீர் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதில்லை என்றும், அதற்குப் பதிலாக, சுழற்சி முறையில் மாற்று பயனப்பாடுகளுகளை பயன்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளது

ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.27 லிட்டர் தண்ணீர் பயன்பாடு

2024-ல் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.15 லிட்டராக இருந்த இந்த பயன்பாட்டு அளவு, தற்போது குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்டின் சமீபத்திய அறிவிப்பில், அதன் நீர் பயன்பாட்டுத் திறன் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.27 லிட்டராக இருந்தாக தெரிவித்துள்ளது

நீர்நிலைகளை மீட்டெடுத்தல், கிணறுகள் மற்றும் நீர் அமைப்புகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம், 2030-ஆம் ஆண்டுக்குள் தான் எடுக்கும் நீரை விட அதிக நீரைச் சுற்றுச்சூழலுக்கும் மற்ற பயனர்களுக்கும் திருப்பிக் கொடுப்பதை ஒரு இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in