ஹார்முஸ் ஜலசந்திக்குப் பதிலாக செங்கடல் வழியாக எண்ணெய் வர்த்தகம் : அராம்கோ முடிவு

Iran Israel US War Update in Tamil : ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், செங்கடல் வழியாக எண்ணெய் வர்த்தகத்தை துவக்க அராம்கோ முடிவு செய்துள்ளது.
Aramco decided start oil trade through the Red Sea, with Iran closing Strait Hormuz due to  war
Aramco decided start oil trade through the Red Sea, with Iran closing Strait Hormuz due to warSource : Google
1 min read

மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி

Iran Israel US War Update in Tamil : போரின் எதிரொலி காரணமாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்துள்ளது. மீறி அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரானின் IRGC பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆதலால் இந்த பாதை வழியாக எந்த கப்பலும் செல்ல அனுமதியானது தற்போது மறுக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடம்

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீர்ச்சந்தி, உலக எரிசக்தி தேவையின் முக்கிய மையமாக கருதப்படுகிறது.

இதன் அகலம் மிகக் குறுக்கியதாக இருப்பதால் . கப்பல்கள் செல்லும் பாதை வெறும் 3 கி.மீ மட்டுமே என்பதால் இந்த வழி தடமானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது .

20 மில்லியனை கடந்தும் நடைபெறும் வர்த்தகம்

இவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் ஹார்முஸ் நீரிணை வழியாக நாள்தோறும் 20 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் பிரமாண்ட சரக்கு கப்பல்கள் மூலம் இந்த வழியாக பிரமாண்டமான வர்த்தகம் நடைபெற்று வருகிறது .

மாற்று வழியில் வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு

தற்போதைய சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் வழக்கமாக வளைகுடா நாடுகள் வழியாக எண்ணெய் வர்த்தகம் செய்து வந்திருந்த நிலையில் தற்போது அது போரின் காரணமாக மூடப்பட்டிருப்பதால் அராம்கோ, நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள செங்கடல் வரை செல்லும் 50 லட்சம் பேரல் திறன் கொண்ட குழாய் பாதையை பயன்படுத்தத் போவதாக திட்டமிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஆசியாவில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களையும் கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுளளது . யான்பு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற பேச்சிலும் ஈடுபட்டு வருகின்றது .

மாற்று வழியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது

அதேவேளையில், செங்கடல் பகுதியின் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகமும் பாதுகாப்பானது அல்ல. ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி பயங்கரவாத அமைப்பினர், இப்பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.

இதனால் பெரிய கப்பல் நிறுவனங்கள் இந்த வழியை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.அண்மையில் அராம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரா மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால் அந்நிறுவனம் ஏற்கனவே பாதிப்பை சத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in