1980, 81 : காஷ்மீர், கர்நாடகாவில் பயணித்த அயதுல்லா அலி கமேனி : பொதுமக்களுடன் சந்திப்பு

Ayatollah Ali Khamenei visit in India : ஈரான் தலைவர் கமேனி இதற்கு முன்னர் இந்தியாவின் காஷ்மீர், கர்நாடகா பகுதிகளுக்கு வருகை புரிந்து மக்களுடன் உரையாடி யிருக்கிறார்.
Ayatollah Ali Khamenei visited Kashmir and Karnataka in India
Ayatollah Ali Khamenei visited Kashmir and Karnataka in India google
1 min read

உச்ச தலை​வ​ராவதற்கு முன்பே இந்திய வந்த காமேனி

Ayatollah Ali Khamenei visit in India : ஈரானின் தலை​வ​ராவதற்கு முன்பே இந்தியாவின் காஷ்மீர், கர்நாடகாவில் மக்களை சந்தித்து உரையாடியிருக்கிறார்.

1980ம் ஆண்டு காஷ்மீர் வந்த கமேனி, அப்போதய சூழலில் காஷ்மீரில் சன்னி மற்​றும் ஷியா முஸ்​லிம்​கள் இடையே பகைமை நிலவி வந்த நிலை .

அப்​போது காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு வந்த அயத்துல்லா அலி காமேனி, சன்னி மசூ​தி​யில் நடை​பெற்ற வெள்ளிக் கிழமை தொழுகை​யில் பங்​கேற்று 15 நிமிடங்​கள் உரையாற்​றி​னார்.

சன்னி மற்​றும் ஷியா முஸ்​லிம்​கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

1981ம் ஆண்டு இந்தியா வந்த காமேனி

1981ம் ஆண்டு காமேனி பெங்களூரு மற்​றும் அலிபூருக்கு வருகை புரிந்தார் . அப்போது அலிப்​பூர் ஷியா முஸ்லிம்​கள் அதி​கம் வசிக்​கும் பகுதியில் ஈரான் அரசு உதவியுடன் கட்​டப்​பட்ட மருத்​து​வ​மனையை​யும் காமேனி தொடங்கி வைத்​தார் என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக தற்போது அலிப்​பூர் முஸ்​லிம் இளைஞர்​கள் பலர், ஈரானில் தற்​போது மதக் கல்வி பயின்று வரு​கின்​றனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஈரான் சென்ற முன்னாள் இந்திய பிரதமர்

இந்​திய பிரதம​ராக இருந்த மன்​மோகன் சிங், கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈரான் சென்​ற​போது, தனது இந்​திய பயண அனுபவத்தை பிரதமரிடம் பகிர்ந்து அயத்​துல்லா அலி காமேனி நினைவு கூர்ந்துள்ளார் .

இந்தியாவை பாராட்டிய காமேனி

ஈரானில் உள்ள சீக்​கியர்​கள் அளித்த புத்​தகங்​கள் மூலம் சீக்​கிய மதம் பற்றியும் இன்னும் சில ஒற்றுமைகளை பற்றியும் தெரிந்து கொண்டதாக காமேனி கூறினார்.

குறிப்பாக ஈரான் தலை​வ​ராக அயத்​துல்லா அலி காமேனி பதவி​யேற்ற பின்பு அவர் இந்​தியா வரவில்​லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in