கியூபாவில் முழுவதுமாக சேதமடைந்த மின் கட்டமைப்பு
கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பு முழுமையாக செயலிழந்ததைத் தொடர்ந்து, கியூபாவில் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது
மின்சாரம் இன்றி தவிக்கும் 1 கோடி மக்கள்
கியூபா நாட்டின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து, கியூபாவில் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.ங்குள்ள சுமார் 10 மில்லியன் 1 கோடி மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பேட்டரி உதவிக்கொண்டு மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றர்
தொடர் மின்வெட்டு காரணமாக ,தலைநகர் ஹவானா உட்பட நாட்டின் பெரும்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் அந்நாட்டின் பல தெருக்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகள் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் விளக்குகள் உதவியாலே வெளிச்சத்தை பெற்று வருவதாகவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்க விதித்த எண்ணெய் கட்டுப்பாடு , மின்சார தடைக்கு காரணம்
கியூபாவில் ஏற்பட்டுள்ள மிந்தடைக்கு அந்நாட்டின் பழமையான மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் எரிபொருள் விநியோகத்தைத் துண்டிக்கும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் தடை போன்றவையே இந்த காலவரையற்ற மின் தடைக்கு காரணமாக இருக்கிறது
நீண்ட நாட்களாக மின்வெட்டை சந்திக்கும் கியூபா
மேற்கண்ட காரணங்களின் விளைவாக கியூபா நாடானது பல வாரங்கள் மற்றும் நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறது
தகிக்கும் வெயில், மின்சாரம் இன்றி அவதிப்படும் மக்கள்
ஒட்டுமொத்த கிபாவின் தேசிய மின்சாரக் கட்டமைப்புல் முற்றிலும் செயலிழந்ததை அடுத்து தலைநகர் ஹவானா உட்பட நாடு முழுவதும் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியதோடு
மக்களின் இயல்பு வாழ்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது ,, தகிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் பெரிதளவில் பாதிபுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
=======================