இலங்கையை புரட்டி போட்ட ‘டிட்வா புயல்’ : வெள்ளத்தால் 56 பேர் பலி

Ditwah Cyclone Lashes Sri Lanka Death Toll : டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
Death toll from heavy rains, flooding in Sri Lanka due to Cyclone Ditwah has risen to 56 Latest News in Tamil
Death toll from heavy rains, flooding in Sri Lanka due to Cyclone Ditwah has risen to 56 Latest News in TamilGoogle
1 min read

இலங்கையை பதம் பார்க்கும் டிட்வா புயல்

Ditwah Cyclone Lashes Sri Lanka Death Toll : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல், இலங்கை அருகே மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இலங்கைத் தீவு முழுவதும் மழை கொட்டி வருகிறது.

வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு

ஏற்கனவே 10 நாட்களாக இலங்கையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், டிட்வா புயலால், நாடு முழுவதும் அதி கனமழை கொட்டுகிறது. புயலின் புறப்பகுதி இலங்கை மீது பரவி இருப்பதால், இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

56 பேர் உயிரிழப்பு

மழை, வெள்ளத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 15 பேர் காணாமல் போயிருக்கின்றனர். சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மழையின் தாக்கம் தீவின் 25 மாவட்டங்களில் 17 மாவட்டங்களை முழுமையாக பாதித்துள்ளது.

மின்சாரம் துண்டிப்பு, மரங்கள் முறிவு

குறிப்பாக கொழும்பு, காலி, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மூழ்கி, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்து இருப்பதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இலங்கையில் ரெட் அலெர்ட்

கும்புக்கனா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 23 பயணிகளை, மீட்பு படையினர் மீட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதால், இலங்கை தீவு முழுவதும் “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு தொடரும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு அரசு இடமாற்றம் செய்து வருகிறது.

இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கே தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், பேரிடர் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தர விடப்பட்டது. இராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறையினர் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தலா 10 லட்சம் நிவாரணம்

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

===================================================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in