தீவிர டெங்கு பாதிப்பில் இலங்கை
இலங்கையில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் பாதிப்பு மிக தீவிரமாகி இருப்பதாக அந்நாட்டின் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது .
44,000 க்கும் மேற்ப்பட்டோர் பாதிப்பு
ஜனவரி மாதம் முதல் இதுவரை 44,000 பேருக்கு டெங்கு பாதிப்புல் ஏற்ப்பட்டிருப்பபதாக இலங்கை நாட்டின் சுகாதார த்துறை தெரிவித்துள்ளது
28 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, நெருக்கடியில் அரசு மருத்துவமனைகள்
இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு அந்நாட்டில் ஐந்து குழந்தைகள் உட்பட 28 பேர் வரை உயிரிழந்துள்ளதாக , அந்நாட்டின் சுகாதரத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.
11,000 பேருக்கு டெங்கு பாதிப்பு
இலங்கை தலைநகரமான கொழும்புவில் மட்டுமே அதிகபட்சமாக சுமார் 11,000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாடு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு தவிர்த்து கம்பஹா, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, கண்டி, அம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் குருநாகல் உள்ளிட்ட நகரங்களிலும் டெங்கு பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
ஆண்டு இறுதிக்குள் அதிகமான பாதிப்புகள் ஏற்படக் கூடும்
முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதே மிக மோசமான பதிவாக இருந்த்து ஆனால் ,தற்போதைய பரவல் வேகத்தை பார்த்தால்
இந்த ஆண்டு இறுதிக்குள் 2010-ஆண்டு பதிவான டெங்கு பரவலின் மோசமான நிலையை மீண்டும் எட்ட கூடும் என அந்நாட்டு சுகாதாரஅதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
==================