War Update : உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ”இந்தியாவை நாடும் மாஸ்கோ”..!

தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் அங்கு எண்ணெய் சுத்திகரிப்பானது பாதிப்பு அடைந்து இருக்கிறது...
Due to war with ukrane .Russia is seeking india,s helps for oil imports and exports
Due to war with ukrane .Russia is seeking india,s helps for oil imports and exports Ai Generated
1 min read

உக்ரைன் தாக்குதலால் ஏற்பட்ட புதிய சிக்கல் :

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றான ரஷியா, தற்போது பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் மேற்கொண்ட தொடர் ட்ரோன் தாக்குதல்கள் ரஷியாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை சேதப்படுத்தியதால் இந்த நிலை உருவாகியுள்ளது.

கச்சா எண்ணெய் வல்லரசான ரஷியா ஏன் பெட்ரோல் வாங்குகிறது?

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வளம் அதிகமாக இருந்தாலும், அந்த எண்ணெயை பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றும் சுத்திகரிப்பு நிலையங்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் பெட்ரோல் விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷியாவின் முக்கிய பெட்ரோல் சப்ளையராக இந்தியா :

கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு சுமார் 10 லட்சம் பேரல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து தரவுகள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் உள்ள வடிநார் சுத்திகரிப்பு நிலையம் இந்த ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதன் மூலம் ரஷியாவுக்கு பெட்ரோல் வழங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.

போர் மாற்றிய எரிசக்தி வர்த்தக சமன்பாடு

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கி வருகிறது.

தற்போது அதே கச்சா எண்ணெயை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரித்து, பெட்ரோலாக மாற்றி மீண்டும் ரஷியாவுக்கே ஏற்றுமதி செய்யும் வியப்பான சூழல் உருவாகியுள்ளது. இது உலக எரிசக்தி சந்தையில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

ரஷியாவில் தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி :

ட்ரோன் தாக்குதல்களின் காரணமாக ஆகஸ்ட் மாத இறுதியில் ரஷியாவின் பெட்ரோல் உற்பத்தி உள்நாட்டு தேவையின் சுமார் 70 சதவீத அளவுக்கு மட்டுமே இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பெலாரஸ், கசகஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவுக்கு கிடைத்துள்ள புதிய வாய்ப்பு :

ரஷியாவின் தற்போதைய எரிபொருள் நெருக்கடி, இந்திய சுத்திகரிப்பு துறைக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

உலகின் முக்கிய எரிசக்தி மையங்களில் ஒன்றாக இந்தியா மாறி வருவதை இந்த நிகழ்வு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in