போர் எதிரொலி : கடும் பொருளாதார நெருக்கடி : "10 மில்லியன் ரியால்" : புதிய நோட்டை வெளியிட்டது ஈரான்

Iran Unveils 10 Million Rial Note : ஈரானில் தொடர்ந்து நீடித்து வரும் போர் மற்றும் கடுமையான பொருளாதார சிக்கல்கள் காரணமாக நாட்டின் நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது
Echoes of Iran Israel war; Economic crisis - Iran issues 10 million rial note
Echoes of Iran Israel war; Economic crisis - Iran issues 10 million rial notegoogle
1 min read

போர் எதிரொலி : பொருளாதார நெருக்கடி

Iran Unveils 10 Million Rial Note : ஈரானில் தொடர்ந்து நீடித்து வரும் போர் மற்றும் கடுமையான பொருளாதார சிக்கல்கள் காரணமாக நாட்டின் நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது . இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனை பாதிப்பு

தொடர்ந்து நீடித்து ஈரான் அமெரிக்கா இடையேயான தொடர் போர் காரணமாக ஈரானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது .

குறிப்பாக பண பரிவர்த்தனை சிக்கல் அங்கு தழைத்தோங்கி உள்ளது ,இதனால் மின்னணு பண பரிவர்த்தனை முறைகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதால், மக்கள் காசோலைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தவிர்த்து, நேரடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர்.

10 மில்லியன் ரியால்

இதனை தொடர்ந்து ஈரான் அதன் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மதிப்புள்ள பணத்தாளான10 மில்லியன் ரியால் நோட்டை ஈரான் வெளியிட்டுள்ளது.

இந்த 10 மில்லியன் ரியால் நோட்டின் அறிமுகம், நாட்டின் பொருளாதார நெருக்கடி எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது

மேலும் படிக்க : 13 லட்சம் கோடி இழப்பு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி : "இந்த ஆண்டின் மிக மோசமான பங்குச்சந்தை சரிவு"

கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் ஈரான்

அமரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஈரான் பல எண்ணெய் துறைமுகங்கள் கடுமையான பதிப்பி சந்தித்துள்ளது.

மேலும் அந்நாட்டு மக்களின் இயல்பு பண பரிவர்த்தனை பரிமாற்றத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இதனையொட்டி அந்நாட்டு அரசு 10 மில்லியன் ரியால் நோட்டை வெளியிட்டுள்ளது.

10 மில்லியன் ரியால் நோட்டின் வடிவமைப்பு

இந்த 10 மில்லியன் ரியால் நோட்டின் ஒரு பக்கத்தில் யாஸ்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க ஜாமே பள்ளிவாசலும், மறுபுறம் பண்டைய பாம் கோட்டையும் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in