ஐநா பொதுச் புதிய செயலாளர்? : களத்தில் 8 பேர் : ரேசில் முந்தும் கோஸ்டாரிகாவின் ரெபேக்கா கிரின்ஸ்பான்...!

ஐநா சபையின் பொதுச் செயலாளர் பதவிக்கு, 5 பெண்கள் உட்பட 8 பேர் களத்தில் நிற்கிறார்கள். கோஸ்டாரிகாவை சேர்ந்த ரெபேக்கா கிரின்ஸ்பான் ரேசில் முந்துகிறார்.
Eight candidates, including five women, are in the running for the position of UN Secretary-General
Eight candidates, including five women, are in the running for the position of UN Secretary-Generalsource:thamizhalai,ai generated
3 min read

ஐநா பொதுச்சபை

இரண்டாம் உலகப் போர் சர்வதேச அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திச்சு. போரில் ஈடுபட்ட நாடுகளுக்கு தான் பிரச்சினை அப்படின்னு பார்த்தா, சம்பந்தமே இல்லாத நாடுகள் கூட சண்டையால சிக்கல்களை சந்திச்சு, பொருளாதார பிரச்சினைகள் எதிர்கொள்ள வேண்டியதாச்சு.

எனவே, தேவையில்லாம உலகப் போர்கள் ஏற்படுவதை தடுக்கவும், நாடுகள் இடையே அமைதி, பாதுகாப்பை நிலைநாட்டவும், ஒரு சர்வதேச அமைப்பு தேவை என்ற எண்ணம் எல்லார்க்கிட்டேயும் வந்துச்சு.

இதன் காரணமாக, 1945-ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி நிறுவப்பட்டத்து தான் ஐக்கிய நாடுகள் சபை, அப்படின்னு அழைக்கப்படுகிற ஐநா சபை.

நாடுகளுக்கிடையே வரும் மோதல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கிறது, உலக அமைதியை பாதுகாக்கிறது, மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கிறது, குடிமக்களோட சுதந்திரத்தை உறுதி செய்யறது,

பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் மனிதாபிமான வழிகளில நாடுகளிடையே ஒத்துழைப்பை வளர்க்கிறது, சர்வதேசச் சட்டங்களை அனைவரையும் மதிக்க செய்து செயல்படுத்துறது ஐநா சபையோட முக்கியமான பணிகள் ஆகும்.

செல்வாக்கு சரிவு

உலக அளவில் சக்தி வாய்ந்த அமைப்பா, ஐநா சொன்னா யாரா இருந்தாலும் கேட்கணும் என்கிற அளவில் தான் சமீப காலம் வரை இதனோட செல்வாக்கு இருந்துச்சு.

ஆனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஐநா சபையை மதிக்கிறது கிடையாது, அவற்றுக்கான நிதியையும் குறைச்சதால, இந்த அமைப்பால முழுமையாக செயல்பட முடியாத நிலை இன்னிக்கு இருக்கு.

அதனால தான் ரஷ்யா - உக்ரைன் போர், ஈரான் போரில ஐநா சபை ஆக்கப்பூர்வ முடிவுகளை எடுக்காம முடங்கி போய் கிடக்கு அப்படின்னே சொல்லலாம்.

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ்

இப்போ, ஐநா சபையோட பொதுச் செயலாளரா இருப்பவரு அன்டோனியோ குட்டெரெஸ். இவரது பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31ம் தேதியோட முடிவுக்கு வருது. இவர் இரண்டு முறை ஐநா பொதுச் செயலாளரா பதவி வகிச்சவரு.

உலகின் மிக உயர்ந்த ராஜதந்திர பதவியான ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டு இருக்கு. ஏற்கனவே, புதிய பொதுச் செயலாளரை தேர்ந்து எடுக்கும் பணியானது நடந்து வருது.

களத்தில் 8 வேட்பாளர்கள்

பல்வேறு நாடுகளால் அதிகாரப் பூர்வமாக பரிந்துரை செஞ்ச, எட்டு பேர் வேட்பாளர்களா களத்தில் நிக்கிறாங்க.

5 பெண்கள் போட்டி

சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர், ஐ.நா. வர்த்தக அமைப்பின் தலைவர், முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் அப்படின்னு 5 பெண்கள் உட்பட 8 அனுபவமிக்க ஆளுமைகள் பொதுச் செயலாளர் பதவிக்கான ரேசில் இருக்காங்க.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய வாக்கெடுப்புகள் தீவிரமடைஞ்சி இருக்கிற நிலையில, போட்டியிடும் வேட்பாளர்கள் பத்தி சுருக்கமா பார்ப்போம்.

இவோன் ஏ-பாகி

இவோன் ஏ-பாகி (Ivonne A-Baki) ஈர்வேடார் நாட்டை சேர்ந்த இவர், பல நாடுகளின் தூதராகவும், அந்நாட்டோட அமைச்சராக பணியாற்றி இருக்காங்க.

சண்டைகளை தடுத்தல், ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம், ஐநா மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தலை பிரச்சாரமாக கொண்டு, களத்தில் நிற்கிறாங்க.

ரஃபேல் குரோஸி

ரஃபேல் குரோஸி (Rafael Grossi) அர்ஜென்டீனாவை சேர்ந்த இவரு, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைமை இயக்குநராக இருக்காரு.

அணுசக்தி, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளை கையாள்வதில் தனக்குள்ள ஆழமான அனுபவத்தை முன்வைத்து, பொதுச் செயலாளர் பதவிய பிடிக்க தீவிரமா இருக்காரு.

ரெபேக்கா கிரின்ஸ்பான்

ரெபேக்கா கிரின்ஸ்பான் (Rebeca Grynspan) கோஸ்டாரிகா நாட்டின் முன்னாள் துணை அதிபரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான இவர், தற்போது ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஐ.நா. மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை மீட்டெடுத்தல், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய வளர்ச்சிச் சவால்களை எதிர்கொள்வதில் நம்பிக்கை கொண்டவர்.

லானா நுசைபே

லானா நுசைபே (Lana Nusseibeh) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர், ஐநாவுக்கான அமீரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் தூதராகவும் 11 ஆண்டுகள் ஏலை பார்த்து இருக்காரு.

பன்முக ஒத்துழைப்பு மற்றும் மோதல் தடுப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் மிக்க இவர், அரபு நாடுகளோட முழு ஒத்துழைப்போட பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடறாரு.

ஒலாரா ஒடுன்னு

ஒலாரா ஒடுன்னு (Olara Otunnu) உகாண்டா நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதியுமான இவர், ஐ.நா.வின் துணைப் பொதுச்செயலாளராகவும், ஆயுத மோதல்களில் குழந்தைகள் நலனுக்கான சிறப்புப் பிரதிநிதியாகவும் பணியாற்றி இருக்காரு.

உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பில் ஐநாவின் பங்கை வலிமையா இருக்கணும் அப்படிங்கிறது தான் இவரோட எண்ணமா இருக்கு.

கரோலின் பிர்கெட்

கரோலின் பிர்கெட் (Carolyn Rodrigues Birkett ) 2020 முதல் ஐ.நா.வுக்கான கயானாவின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றி வரும் இவர், அதற்கு முன்பு கயானாவின் வெளியுறவு அமைச்சர் மற்றும் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சராக இருந்து இருக்காரு.

மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி மற்றும் ஐநாவின் அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி இவர் போட்டிக் களத்தில வலுவா நிக்கிறாரு.

ஃபெரிதுன் ஹாதி சினிர்லியோக்லு

ஃபெரிதுன் ஹாதி சினிர்லியோக்லு (Feridun Hadi Sinirlioğlu) 2024 முதல் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வர்றாரு.

முன்னதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சராகவும், ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்த இவர், ஐ.நா. சீர்திருத்தம் மற்றும் சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலம் அமைப்பை மேலும் திறம்படச் செயல்பட வைப்பதைத் தனது இலக்காகக் கொண்டு இருக்காரு.

ஐநா பொதுச் செயலாளராக ஒரு பெண்?

5 பெண்கள் உட்பட 8 பேர் ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டியில இருப்பது, உலக அளவில கவனம் ஈர்த்து இருக்கு. இதுவரை ஐநா சபையோட பொதுச் செயலாளர் பதவியை பெண்கள் யாரும் வகிச்சது கிடையாது. முதன்முறையா இந்த முறை அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை தான், 5 பெண்கள் ரேசில் இருப்பது உணர்த்துகிறது.

முந்துகிறார் ரெபேக்கா கிரின்ஸ்பான்

ரெபேக்கா கிரின்ஸ்பான் போட்டியில முன்னணியில இருக்காங்க. இவர் தேர்ந்து எடுக்கப்பட்டா, ஐநா சபையோட முதல் பெண் பொதுச் செயலாளர் என்ற பெருமை கிடைக்கும். 2022ல ரஷ்யா-உக்ரைன் இடையே கருங்கடல் பகுதியில தானிய ஏற்றுமதி செய்யுற பிரச்சினையை தீர்த்து, ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள இவர் உறுதுணையா நின்னாரு.

15 உறுப்பினர்கள் தேர்வு செய்வர்

சரி இப்போ ஐநா பொதுச் செயலாளர எப்படி தேர்ந்து எட்டுகிறாங்க அப்படின்னு பார்ப்போம். ஐநா பாதுகாப்பு சபையில நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை வீட்டோ அதிகாரம் கொண்டவை.

நிரந்தர உறுப்பு நாடுகளின் கையில் முடிவு

அதற்கு அடுத்தபடியா, தற்காலிக உறுப்பு நாடுகளா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை 10 நாடுகள் தேர்வு செய்யப்படும். இவங்க 15 பேர் இணைஞ்சு தான், பொதுச் செயலாளரை தேர்வு செய்வாங்க. அவரை ஐநா சபை ஏற்றுக் கொள்ளும்.

வீட்டோ அதிகாரம் கொண்ட 5 நாடுகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, பொதுச் செயலாளர் தேர்வை தடுக்க கூடாது என்பதற்காக 15 பேரில் 9 பேர் ஆதரவு தெரிவிக்கும் போட்டியாளர் தான், தேர்வு செய்யப்படுவார்.

ஆனாலும் 9 வாக்குகள் பெற்றாலும், 5 நிரந்தர நாடுகளின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும். அப்படி இருந்தால் தான் ஐநா பொதுச் செயலாளர் ஆக முடியும். இதில் ஒருவர் எதிர்த்தாலும் சிக்கல் தான்.

எனவே, நிரந்தர உறுப்பினர்கள் 5 பேர், கூடுதலாக 4 நாடுகளின் ஆதரவு கிடைக்கும் நபர் ஐநா பொதுச் செயலாளர் ஆவார். இதுவரை நடந்த வாக்கெடுப்புகளில் ரெபேக்கா கிரின்ஸ்பானுக்கு 12 ஓட்டுகள் கிடைச்சாலும், நிரந்தர நாடு ஒன்று எதிராக வாக்களிச்சு இருக்கு.

டிச. 31க்குள் தேர்வு

எனவே, டிசம்பர் 31ம் தேதிக்குள் ஒரு முடிவு எட்டப்பட்டு, அடுத்த பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுது. இனியாவது, அமெரிக்கா போன்ற நாடுகளோட நெருக்கடிக்கு ஆளாகாம, ஐநா சபை சுதந்திரமா செயல்படனும் அப்படிங்கிறத அனைவரோட எதிர்பார்ப்பா இருக்கு.

======================