

எக்ஸ் தளத்தில் எலான் பதிவு
Elon Musk Predicts on World War 3 & Nuclear War : எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். இவர் சமூகவலைதளத்தில் தனது மனதில் இருப்பதை வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
போர்களே இல்லை
அந்தவகையில், உலகளாவிய மோதல் குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஹண்டர் ஆஷ் என்ற பயனர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
''போர் அச்சுறுத்தல்கள் இல்லாததால் உலகெங்கிலும் உள்ள அரசுகள் செயலற்றுப் போயுள்ளன. எனவே நிர்வாகத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்துள்ளது'' என ஹண்டர் ஆஷ் கூறியிருந்தார்.
எலான் மஸ்க் பதில்
இதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். “ போர் நிச்சயம் நடக்கும். எப்போது என்று நீங்கள் கேட்கலாம்.
உலகப்போர் நடக்கும்
எனது கணிப்புப்படி 2030ம் ஆண்டுக்குள் நடக்கும். போர் தவிர்க்க முடியாதது. இன்னும் 5 ஆண்டுகளில் நடக்கும். அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் அது நடக்கும். இவ்வாறு எலான் மஸ்க் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கீழ், அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக எலான் மஸ்க் பதவி வகித்தவர். எனவே, அவரது இந்தக் கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அணுஆயுத போருக்கும் வாய்ப்பு இருப்பதாக எலான் மஸ்க் எச்சரித்து இருப்பது, உலக அளவில் கவனம் பெற்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
===