ட்ரம்ப் எதிர்ப்பில் உறுதி: அரசியலில் குதித்தார் எலான் மஸ்க்

தி அமெரிக்கா பார்ட்டி - கட்சி தொடங்குவதில் உறுதி
ட்ரம்ப் எதிர்ப்பில் உறுதி: அரசியலில் குதித்தார் எலான் மஸ்க்
https://x.com/elonmusk
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்ம்ப் உடனான மோதலை போக்கை அடுத்து, புதிய கட்சி ஒன்றை தொடங்குவதில் தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர்களின் மோதல் போக்கு, அமெரிக்க விண்வெளி திட்டங்களை கிடப்பில் போடும் நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்பை முழுமையாக ஆதரித்தார் எலான் மஸ்க்.

வெற்றி பெற்று அதிபரான ட்ரம்ப், அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறையை உருவாக்கி, அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.

ட்ரம்ப் தரப்பில் கொண்டு வரப்பட்ட "பிக், பியூட்டிபுல்" மசோதாவை கடுமையாக எலான் மஸ்க் விமர்சித்து வருவதால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து, அரசு செயல் திறன் துறை தலைவர் பதவியை ராஜினாமா செய்த மஸ்க், ட்ரம்பிற்க்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

ட்ரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், புதிய கட்சி தொடங்கும் முனைப்பில் அவர் உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில். ”அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நடத்திய கருத்துக் கணிப்பில், 80 சதவீதம் பேர் எலான் மஸ்க் புதிய கட்சியை தொடங்க ஆதரவு தெரிவித்தனர்.

இதனால், உற்சாகம் அடைந்துள்ள எலான் மஸ்க், "தி அமெரிக்கா பார்ட்டி" என்ற பெயரை முன் மொழிந்து ட்ரம்பை அதிர வைத்து இருக்கிறார்.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற எங்களின் ஆதரவு, நிதியுதவியே காரணம் என்று வெளிப்படையாக கூறும் எலான் மஸ்க்கின் ஆதரவாளர்கள், அமெரிக்கர்களின் நலனுக்கு எதிராக இப்போது அவர் செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

புதிய கட்சியை தொடங்கும் மஸ்க், ட்ரம்பை விஞ்சுவாரா அல்லது பணிந்து போவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ட்ரம்ப்-எலான் மஸ்க் இடையேயான மோதல் போக்கு, அமெரிக்காவின் நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை செயல்படுத்தி வரும் 40க்கும் மேற்பட்ட விண்வெளி திட்டங்களுக்கு முட்டுக் கட்டையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in