எலான் மஸ்க்கின் ”Grok AI” : டைப் அடிக்க வேண்டாம், பேசினால் போதும்!

டைப் செய்யாலம், பதில் பெறும் வசதியை, எலான் மஸ்க்கின் Grok AI புதிய குரல் வழி அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Elon Musk's Grok AI introduced a new voice-activated feature that lets you type
Elon Musk's Grok AI introduced a new voice-activated feature that lets you type
2 min read

எலான் மஸ்க்கின் க்ரோக்

Grok’s new feature set to create sensation: Get answers without typing : செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உலகில் தினமும் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் தனது ‘Grok’ (க்ரோக்) ஏஐ-யில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி கேட்க டைப் செய்ய வேண்டியதில்லை

இதன்மூலம் கேள்விகளைக் கேட்க சிரமப்பட்டு டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை; உங்கள் குரலையும் கேமராவையும் பயன்படுத்தினால் போதுமானது. AI சாட்பாட்களுடன் உரையாட வேண்டும் என்றால், நீண்ட வாக்கியங்களை டைப் செய்ய வேண்டியிருந்தது.

‘Voice Mode’ - புதிய அம்சம்

ஆனால், Grok-ன் இந்த புதிய ‘Voice Mode’ மூலம், நீங்கள் உங்கள் நண்பரிடம் போனில் பேசுவது போலவே இயல்பாகப் பேசலாம். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, இந்த AI உடனடியாகப் பதிலளிக்கும். குறிப்பாக, பயணத்தின் போது, முக்கிய வேலைகள் இருக்கும் போது, தகவல்களைப் பெற இது மிகவும் உதவியாக இருக்கும்.

கண்ணில் பட்டால் விளக்கும் மேஜிக்

இந்த அப்டேட்டின் மிக முக்கியமான htyfசிறப்பம்சமே அதன் ‘கேமரா விஷன்’ (Camera Vision) தான். எலான் மஸ்க் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த வீடியோவில் இது எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கிக் காட்டியுள்ளார்.

உங்கள் மொபைல் கேமராவை ஆன் செய்து, உங்களுக்கு முன்னால் இருக்கும் ஒரு இடத்தையோ அல்லது பொருளையோ காட்டினால் போதும்; Grok அது என்ன, அதன் வரலாறு என்ன, அதன் சிறப்புகள் என்ன என்பதை நொடிப்பொழுதில் குரல் வழியாக விளக்கி விடும்.

பயணிகளுக்கு அனைத்தும் எளிது

புதிய இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்த அம்சம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். உதாரணமாக வெளிநாட்டில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்க்கிறீர்கள் ஆனால் மொழி புரியவில்லை என்றால், Grok-யிடம் காட்டினால் போதும், அது உடனே மொழிபெயர்த்துச் சொல்லிவிடும்.

வழிகாட்டியே தேவையில்லை

அல்லது ஒரு வரலாற்றுச் சின்னத்தைப் பார்க்கும்போது, வழிகாட்டி (Guide) இல்லாமலே அதன் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.

குரல் வழி மற்றும் கேமரா அம்சங்களைத் தவிர, வீடியோ உருவாக்கும் திறனையும் xAI மேம்படுத்தியுள்ளது.

துல்லியமான வீடியோக்கள்

முன்பு 5 விநாடிகள் மட்டுமே வீடியோவை உருவாக்க முடிந்த நிலையில், இப்போது 10 விநாடிகள் வரை துல்லியமான வீடியோக்களை உருவாக்க முடியும். அதேசமயம், தவறான உள்ளடக்கங்களைத் தடுக்கவும், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடுமையான கட்டுப்பாடுகளையும் xAI விதித்துள்ளது.

எலான் மஸ்க்கின் தனித்துவம்

கூகுளின் ஜெமினி (Gemini) மற்றும் ஓபன் ஏஐ-யின் சாட்ஜிபிடி (ChatGPT) ஆகியவை ஏற்கனவே இதுபோன்ற மல்டிமாடல் (Multimodal) வசதிகளைக் கொண்டிருந்தாலும், எலான் மஸ்க்கின் தனித்துவமான அணுகுமுறையும், எக்ஸ் தளத்தின் நேரடி தரவுகளும் (Real-time data) Grok-க்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கின்றன.‘டைப்பிங் இல்லாத’ அனுபவம் பயனர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in