எகிப்து பயிற்ச்சியாளார் ஹோசாம் ஹாசன், ஆதங்கம்
நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம், எங்களுக்கு இழைக்கப்பட்டிருப்பது அநீதி. நாங்கள் அங்கு மரியாதையையோ அல்லது நியாயமான ஆட்டத்தையோ பார்க்கவில்லை. அங்கு மரியாதையும் இல்லை, நியாயமான ஆட்டமும் இருக்கவில்லை.
மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன என்று எகிப்து பயிற்ச்சியாளார் ஹோசாம் ஹாசன் அதங்கமாக தெரிவித்திருகிறார்
அர்ஜெ்ன்டினாவிற்கு எதிரான ஆட்டத்தில் அநீதி
அர்ஜெ்ன்டினா அணி தனது வெற்றிக் கோலை அடிப்பதற்கு சற்று முன்பாக, முகமது சாலா மற்றும் ஹம்டி ஃபதி ஆகியோர் அர்ஜெண்டினா வீரர்களால் ஃபவுல் செய்யப்பட்டபோது எகிப்துக்கு கிடைக்க வேண்டிய பெனால்டி வாய்ப்புகள் விஏஆர் மூலம் சரிபார்க்கப்படாமல் மறுக்கப்பட்டன.
விஏஆர் சோதனையின் மூலம் ரத்து செய்யப்பட்ட கோல்
கடைசி 13 நிமிடங்கள் வரை எகிப்து அணி 2-0 என வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்டம் தலைகீழாக மாறிய நிலையில் எகிப்து அடித்த ஒரு கோல், விஏஆர் சோதனையின் மூலம் முந்தைய ஃபவுலைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது.
ஹோசாம் ஹாசன் குற்றச்சாட்டு
ஒருவேளை அவர்கள் உலக சாம்பியனை இந்தத் தொடரில் தொடர்ந்து தக்கவைக்க விரும்பியிருக்கலாம். ஒருவேளை மெஸ்ஸி தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
கால்பந்தில் சில நேரங்களில் தொழில்நுட்ப ஆட்டத்தையும் தாண்டி சில வெளிப்புறக் காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலக சாம்பியன்கள் அனைத்து மட்டங்களிலும் ஆதரவைப் பெற்றனர் என்று ஹோசாம் ஹாசன் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்
கால்யிறுதிக்கு் முன்னேறிய அர்ஜெண்டினா
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அட்லாண்டாவில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
உலக கோப்பை, கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியவை நிறைய இருக்கு
மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்று ஹோசாம் ஹாசன் கூறினார்.
எகிப்து அதிகாரப்பூர்வமாக புகார் அளிப்பு
இந்த போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்சுவா லெடெக்சியர் தலைமையிலான நடுவர் குழுவின் செயல்பாடுகளுக்கு எதிராக எகிப்து கால்பந்து சங்கம் பிஃபாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
போட்டியின் முக்கிய தருணங்களில் எகிப்துக்கு ஆதரவான விஏஆர் மறுஆய்வுகள் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டதாகவும் எகிப்து குற்றம் சாட்டியுள்ளது.
நடுவர் குழுிவை நீக்க வலியுறுத்தல்
இதனால் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து பிரான்சுவா லெடெக்சியர் மற்றும் அவரது நடுவர் குழுவினரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இந்த தவறுகள் குறித்து பிஃபா விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் எகிப்து கால்பந்து சங்கத் தலைவர் ஹானி அபோ ரிடா வலியுறுத்தியுள்ளார்.