டெக்சாஸில் 27 லட்சம் கோடியில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : ரிலையன்ஸ், அம்பானிக்கு டிரம்ப் நன்றி!

Donald Trump Thanks Mukesh Ambani for First Oil Refinery in Texas : 50 ஆண்டுகளில் முதல் புதிய அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அம்பானிக்கு நன்றி தெரிவித்த டிரம்ப் !
First Oil Refinery in Texas Worth ₹ Rupees 27 Lakh Crore: Donald Trump Thanks Reliance and Ambani!
First Oil Refinery in Texas Worth ₹ Rupees 27 Lakh Crore: Donald Trump Thanks Reliance and Ambani!source:google
2 min read

அமெரிக்காவில் முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி

First New U.S. Oil Refinery in 50 Years: Trump Thanks Ambani : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமெரிக்காவில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதான பணி

உலக நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கி, அதை சுத்திகரித்து மீண்டும் ஏற்றுமதி செய்வது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதான பணிகளில் ஒன்று.

27 லட்சம் கோடி முதலீடு

அந்த வகையில் இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமானது அமெரிக்காவில் முதலீடு செய்யவுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு 27 லட்சம் கோடி என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது இதுவே முதல்முறை ஆகும்.

வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்

அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 300 பில்லியைல் டெக்சாசின் பிரவுண்வில் துரைமுகத்தில் இத்தட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருவதகாவும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் எரிசக்தி உற்பத்திக்கு இத்திட்டம் மிகப்பெரும் அளவில் ஊக்கமளிப்பதாவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலை தளப்பதிவில்,

அமெரிக்கா உண்மையான எரிசக்தி ஆதிக்கத்திற்கு திரும்புகிறது! பிரவுன்வில்லே, டெக்சாஸில் 50 ஆண்டுகளில் முதல் புதிய அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங் திறக்கிறது என்பதை இன்று பெருமையுடன் அறிவிக்கிறேன்.

$300 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க $300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் - அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரியது, அமெரிக்க தொழிலாளர்கள், எரிசக்தி மற்றும் தென் டெக்சாஸின் சிறந்த மக்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி!

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு டிரம்ப் நன்றி

இந்த மகத்தான முதலீட்டிற்காக இந்தியாவில் உள்ள எங்கள் கூட்டாளர்களுக்கும், அவர்களின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ்க்கும் நன்றி.

எங்கள் அமெரிக்கா ஃபர்ஸ்ட் நிகழ்ச்சி நிரல், அனுமதிப்பத்திரங்களை நெறிப்படுத்துதல் மற்றும் வரிகளைக் குறைத்தல் ஆகியவற்றின் காரணமாகவே பில்லியன் கணக்கான டாலர் ஒப்பந்தங்கள் எங்கள் நாட்டிற்குத் திரும்பியுள்ளன.

அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும்

பிரவுன்வில்லே துறைமுகத்தில் ஒரு புதிய சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்க சந்தைகளுக்கு எரிபொருளை வழங்கும், எங்கள் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும்,

உலகின் தூய்மையான சுத்திகரிப்பு நிலையம்

அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும், பில்லியன் கணக்கான டாலர் பொருளாதார தாக்கத்தை வழங்கும், மேலும் உலகின் தூய்மையான சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும்.

இது உலகளாவிய ஏற்றுமதிகளுக்கு சக்தியளிக்கும், மேலும் தகுதியான ஒரு பிராந்தியத்திற்கு ஆயிரக்கணக்கான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகள் மற்றும் வளர்ச்சியை கொண்டு வரும்.

இதுதான் அமெரிக்க எரிசக்தி ஆதிக்கம் போல் தெரிகிறது. அமெரிக்கா முதலில், எப்போதும்! என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in